விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எம்மானே! என் வெள்ளை மூர்த்தி!*  என்னை ஆள்வானே* 
    எம் மா உருவும் வேண்டும் ஆற்றால்*  ஆவாய் எழில் ஏறே* 
    செம் மா கமலம் செழு நீர்மிசைக்கண் மலரும்*  திருக்குடந்தை* 
    அம் மா மலர்க்கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே!* (2)   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எம்மானே - எல்லாவிதத்திலும் மஹானானவனே!
என் வெள்ளை மூர்த்தி - என்னை ஈடுபடுத்திக்கொண்ட பரிசுத்த ஸ்வரூபனே!
என்னை ஆள்வானே - என்னை அடிமை கொள்பவனே!
வேண்டும் ஆற்றால் - திருவுள்ளமானபடியே
எம் மா உருவும் ஆவாய்- எப்படிப்ப்ட அவதார விக்ரஹங்களையும் பரிக்ரஹிப்பவனே!
மா செம் கமலம் - பெரிய செந்தாமரைகள்

விளக்க உரை

(எம்மானே!) கீழ்ப்பாட்டில் “கண்டேனெம்மானை!” என்ற ஆழ்வாருடைய கருத்து- பிரானே! உன்னை உலகத்தார் காண்கிற ரீதியிலே நானும் காணுமித்தனையேயோ? எனக்காக எழுந்திருத்தல், இருத்தல், உலாவுதல், குசலப்ரச்னம் பண்ணியருளுதல், அணைத்தல் தெய்தருள வேண்டாவோ? என்று கேட்பதாம். அங்ஙனே கருத்துத் தொளிக்கக் கூப்பிடச் செய்தோம் ஆராவமுதன் அசையாதேயிருக்க, மீண்டுமொருபடி கூப்பிடுகிறார். எனக்கு ஸ்வாமியானவனே! அகிலஹேயப்ரத்யநீக கல்யாணைகதாநமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடையவனே! அப்படிப்பட்ட திவ்யமங்கள விக்ரஹத்தின் அழகைக்காட்டி என்னை ஆட்படுத்திக் கொண்டவனே!, என்னைப் போன்ற ஸம்ஸாரிகள் நல்வினை தீவினைகளுக்கு ஏற்றவாறு பலவகைப்பட்ட சரீரங்களை பரீக்ரஹிக்குமாபோலே, நீர்ஹேதுக கருணையினாலும் திவ்யஸங்கல்பத்தாலும் வேண்டினபடியெல்லாம் அவதார ரூபங்களைப் பரிக்ரஹித்துப் பொருள் செய்பவனே!, இங்ஙனே உபகாரமே வடிவாயிருக்கின்ற நீ இன்னமும் எனக்குச் செய்யவேண்டிய உபகாரங்களைச் செய்யத்தவரலாமோ? ஒன்றும் செய்ய வேண்டா; திருக்கண்களைத் திறந்து கடாக்ஷித்தருளுமித்னை போராதே அடியேனுக்கு. இத்திருக்கண்களுக்கும் போலியான கமலங்களெல்லாம் நீரிலே மலர்ந்திருக்கும்படியைக் காணாநின்ற நான் வன்காற்றாறைய ஒருங்கே மறிந்து கிடந்தலர்ந்த மென்கால் கமலத்தடம்போற் பொலிந்த எம்பிரான் தடங்கண்கள் இப்படி மலரவேண்டாவோ என்று துடிக்கின்றேனே, இந்தத் துடிப்பைத் தவிர்க்க வேண்டாவோ வென்கிறார்.

English Translation

My Lord, My Ruler, my pure icon, my beautiful black Bull you take any form at will. You recline amid tirukkudandai waters filled with large lotuses, your dreamy eyes liken those flowers! O what can I do?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்