விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தெய்வ நாயகன் நாரணன்*  திரிவிக்கிரமன் அடி இணைமிசை* 
    கொய் கொள் பூம் பொழில் சூழ்*  குருகூர்ச் சடகோபன்*
    செய்த ஆயிரத்துள் இவை*  தண் சிரீவரமங்கை மேய பத்துடன்* 
    வைகல் பாட வல்லார்*  வானோர்க்கு ஆரா அமுதே*. (2)   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தெய்வநாயகன் நாரணன் திரிவிக்கிரமன் - எம்பெருமானுடைய
அடி இணை மிசை - உபய பாதங்களிலே,
கொய் கொள் பூ பொழில் சூழ் குருகூர் சடகோபன் - ஆழ்வார்
செய்த - அருளிச் செய்த
ஆயிரத்துள் - ஆயிரத்தினுள்ளே

விளக்க உரை

(தெய்வநாயகன்.) இத்திருவாய்மொழியைக் கற்குமவர்கள் நித்யஸூரிகளுக்கும் ரெமபோக்யராவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. ஸரிவேச்வரனாய் ஆச்ரிதவத்ஸலனாய் தன்னுடைய பெறுகைக்குத் தான் அர்த்தியாய் அபேக்ஷிதம் செய்து கொடுக்குமவனான எம்பெருமான் திருவடிகளிலே ஆழ்வார் ஸமர்ப்பித்த இத்திருவாய்மொழிளைக் கருத்தறிந்து பாடவல்லவர்கள் காலதத்துவமுள்ளதனையும் நித்தியஸூரிகளுக்குப் பரமபோக்யர்களாக ஆகப்பெறுவரென்றதாயிற்று.

English Translation

This decad of the thousand on the Lor of Srivaramangala- nagar, by Satakopan of kurugur surrounded by groves of happy flowers, addresses the feet of Deivanayaka, Narayana, Tirivikrama. Those who can sing it will forever be sweet as ambrosia to the celestials.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்