விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை*  நன்கு அறிந்தனன்* 
    அகற்றி என்னையும் நீ*  அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய்* 
    பகல் கதிர் மணி மாடம் நீடு*  சிரீவரமங்கை வாணனே*  என்றும்- 
    புகற்கு அரிய எந்தாய்!*  புள்ளின் வாய் பிளந்தானே!*    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பகர் கதிர் - விளங்காநின்ற ஒளியையுடைத்தான்
மணிமாடம் நீடு - மணிமாடங்கள் ஓங்கியிருக்கப்பெற்ற
திரீவரமங்கை - வானமாமலையிவ்பதியிலே
வாழ்நனே - வாழுமவனே!
என்றும் - ஒருநாளும்
புகற்கு அரிய வந்தாய் - (உதவாதவர்களுக்கு) ப்ராபிக்கவொ

விளக்க உரை

(அகற்ற நீவைத்த) கீழ்ப்பாட்டில் * அடியேனைகற்றேலே என்று ஆழ்வார் பிரார்த்திக்கக்கேட்ட எம்பெருமான் ‘ஆழ்வீர்!’ உம்மை அகற்றுவதற்கு என்ன ப்ரளக்தியுண்டாயிற்று? ‘அப்ரஸந்தமாக ஏதுக்கு இரக்கிறீர்?’ என்றருளிச்செய்ய, பிரானே! அடிமைக்க விரோதியான ஸம்ஸாரத்திலே என்னை வைத்திருப்பது அகற்றினபடியன்றோ; அப்ரஸக்தமாயோ என் பேச்சிருப்பது? என்கிறார். அர்த்த பஞ்சக ஜ்ஞானத்திலே விரோதி ஜ்ஞானமும் ஒன்றாயிருக்கும்; அஃது உண்டானபடி இப்பாட்டின் முன்னடிகளிலே சொல்லிற்றாகிறது. கீதையிலே “***- மம மாயா துரத்யயா.” என்று, நான் நினைத்தபிணை ஒருவரால் அவிழ்த்துக்கொள்ளப் போகாது என்று சொல்லிவைத்தபடியே நீ பிணைத்த பிணைக்குத் தப்பிப் பிழைத்தாருண்டோ? ஐந்து இந்திரியங்களையும் அவற்றுக்கு உணவான ஐந்து விஷயங்களையும் பிணைத்துவைத்து இவற்றின் நடுவே என்னை இருந்தினாயே! இது அகற்றுவதற்கு இட்டவழியோ? அன்றி அணுகுவதற்கு இட்டவழியோ? உன்னை உகவாதார் அகன்றுபோம்படிக் கீடாக நீ வைத்தவை இவை என்று நான் நன்றாக அறிந்துகொண்டேன். *மயர்வறமதிநலம் பெறுகையாலே நான் அழகிதாக அறிந்தேன்.

English Translation

These wicked illusion-casting senses that you gave will forsake me one day, I know them well. Even you have forsaken me and dumped me into a quagmire, just see! O Resident of Sivaramangala-nagar where fall mansions shine, Lord who ripped the bird's break, you are hard to reach.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்