விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா!*  என்றும் என்னை ஆளுடை* 
    வான நாயகனே!*  மணி மாணிக்கச்சுடரே*
    தேன மாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர்*  கைதொழ உறை* 
    வானமாமலையே!*  அடியேன் தொழ வந்தருளே*. (2)    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏனம் ஆய் - மஹாவராஹரூபியாய்
நீலம் கீண்ட - பூமியைக்குத்தியெடுத்து வந்து ஸ்வஸ்தானத்திலே சேர்த்த
என் அப்பனே - எம்பெருமானே!
கண்ணா - கண்ணபிரானே!
என்றும் - எந்நாளும்

விளக்க உரை

(ஏனமாய் நிலங்கண்ட.) நான் ஆசைப்பட்டபடியே அடிமை செய்யலாம்படி வந்தருளவேணுமென்கிறார். பிரளயத்துக்குள்ளான பூமியை வராஹருக்கொண்டு எடுத்தாப்போலே ஸம்ஸார வெள்ளத்துக்குள்ளே “ஆவாரார் துணையென்று அலைநீர்கடலுளழுந்தும் நாவாய்போல், பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க” என்கிறபடியே அலைந்துழல்கின்ற என்னையும் எடுத்தருளவேணுமென்னும் கருத்துப்படி “ஏனமாய் நிலங்கீண்டவென்னப்பனே!” என்கிறார். கண்ணா! = “வம்ச பூமிகளை உத்தரிக்கக் கீழ்க்குலம்புக்க வராஹ கோபலரைப்போலே” என்கிற ஆசார்யஹ்ருதய திவ்யஸூக்தி இங்கே நினைக்கத்தக்கது. நிமக்கரையுயர்த்துவதற்காகவே யன்றோ நீ வராஹரூபியாயுத் கோபாலமூர்த்தியாயும் தாழவிழிந்தது; அப்படிப்பட்ட நீ என்னையும் உயரத் தூக்க வேண்டாவோ என்பது உள்ளுறை. என்றும் என்னையாறுடை வானநாயகனே! = நீ வானநாயகனாயிருக்கும்போதும் (அதாவது, பரம பதத்திலே யெழுந்தருளியிருக்கும்போதும்) என்னை ஆட்கொள்ளும்படியையன்றோ ஆராய்ந்து போருவது! என்ற கருத்துக்காண்க.

English Translation

O, Dark effulgent Vaikunta Lord who came as a boar! My Father, my Krishna, ever my Master of the great-heavenly-hill Vanamalai worshipped by the falk of Sivaramangala-nagar amid sweet mango groves! Pray come to me, that I too may worship you!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்