விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாறு சேர் படை நூற்றுவர் மங்க*  ஓர் ஐவர்க்கு ஆய் அன்று மாயப்போர் பண்ணி* 
    நீறு செய்த எந்தாய்!*  நிலம் கீண்ட அம்மானே* 
    தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச்*  சிரீவரமங்கலநகர்* 
    ஏறி வீற்றிருந்தாய்!*  உன்னை எங்கு எய்தக் கூவுவனே?*    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாறு சேர் படை - விரோதிகளாய்க்கொண்டு சேர்ந்த வேளையையுடைய
நூற்றுவர் - துரியோதநாதிகள் நூறு பேர்களும்
மல்க - தொலையும்படி
அன்று - அக்காலத்தில்
ஓர் ஐவர்க்கு ஆம் - பஞ்சபாண்டவர்களுக்குத் துணைவனாயிருந்து கொண்டு

விளக்க உரை

(மாறுசேர்படை) அடியார்களை ரக்ஷிப்பதையே தொழிலாகவுடையவனல்லையோ நீ; என்னை ரக்ஷிப்பது உனக்கு மிகையோவென்கிறார். பஞ்சபாண்டவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து பாரதயுத்தத்தை நடத்தித் துரியோதநாதியரைத் தொலைத்த செய்தியை ஒன்றரையடிகளாலே அநுஸந்திக்கிறார். “***- ஸமஹம் ஸர்வபூதேஷுமே த்வேஷ்யோஸ்தி ந ப்ரியர்!” என்றிருக்கிற பகவானுக்கு ஒருவரையும் பகைவராகச் சொல்லக்கூடாதாயிருக்க, “மாறுசேர்படை நூற்றுவார்” என்று சொல்லலாமோவென்னில், ஆச்ரித விரோதிகளைத் தன் விரோதிகளாக எம்பெருமான் நினைப்பவனாதலாலும், அது தோன்ற “*** -த்விஷதர்கம் ந போந்தவ்யம் த்விஷந்தம் ஸகவ போஜயேத், பாண்டவாந் த்விஷனே ராஜந் மம ப்ராணா ஹி பாண்டவா:” என்று தானே அருளிச் செய்திருக்கையாலும் சொல்லத் தட்டில்லை.

English Translation

O Lord who lifted the Earth! Then you fought a battle for the five Pandavas against the Kauravas and reduced the foes to ashes; you have come to reside in Srivaramangala-nagar amid learned seers who perform Vedic- sacrifices incessantly; I only call to join you there.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்