விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்*  உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து*  நான் 
    எங்குற்றேனும் அல்லேன்*  இலங்கை செற்ற அம்மானே* 
    திங்கள் சேர் மணி மாடம் நீடு*  சிரீவரமங்கலநகர் உறை* 
    சங்கு சக்கரத்தாய்!*  தமியேனுக்கு அருளாயே*.         

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

லங்கை - லங்காபுரியை
செத்த - தொலைத்த
அம்மானே - ஸ்வாமியே!
திங்கள் சேர் - சந்திரனையும் சேர்ந்திருக்கிற
மணிமாடம் - மணி மயமான மாடங்களையுடைத்தாய்

விளக்க உரை

(அங்குற்றேனல்லேன்) பரமபத்திலுள்ளாரில் சேர்ந்தவனல்லேன். இந்நிலத்திலுள்ளாரிலும் சேர்ந்தவனல்லேன் என்கிறவிதற்குக் கருத்து என்னென்னில்; பரமபதத்திலுள்ள நித்யமுக்தர்கள் க்ருதக்ருத்யர்களாய்ப் பலன் கைபுகுந்தவர்களாகையாலே அன்னவர்களது வகுப்பிலே நான் சேர்ந்தவனல்லேன்; தம் தலையாலே ஸாதநாநுஷ்டகம் பண்ணிக்கிடக்கிற இந்நிலத்திலுள்ளார் வகுப்பிலும் சேர்ந்தவனல்லேன். இதுவரையிலும் ஒரு ஸாதனமும் அனுட்டியாமற் போனாலும் இனிமேலாவது ஸாதநாதுஷ்டானம் பண்ண யோக்யதையுண்டன்றோ என்னில்; (உன்னைக் காணுமவாவில் வீழ்ந்து நான் எங்குற்றேனுமல்லேன்) மேலும் ஸாதாரநுஷ்டானம் பண்ணவொண்ணாதபடி வடிவழகு முதலானவற்றிலே விடுபட்டு உன்னைக் காணவேணுமென்னும் ஆசையாலே தளர்ந்து கிடக்கிறேனாகையாலே எவ்விதமான உபாயத்தையும் அநுஷ்டிக்க க்ஷமனல்லேன் என்கை. நீ இருக்குமிடத்தே வந்து கிட்டி உன்னை அநுபவிக்கிறவனல்லேன்; உன்னை ஒரு பொருளாகவே மதியாத ஸம்ஸாரிகளின் திரளிலே சேர்ந்தவனுமல்லேன்; உன்னையொழியவும் தரித்திருக்கிறவர்களின் திரளிலும் சேர்ந்தவனல்லேன் என்றுமாம்.

English Translation

O Lord who destroyed Lanka, I am neither here nor here. Fallen in the desire to see you, I stand nowhere. O Lord of discus and conch residing in Srivaramanagala-nagar, -where the moon caresses fall mansions, -pray grace this forlorn self.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்