விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்*  குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை* 
    வாய்ந்த வழுதி வள நாடன்*  மன்னு- குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து* 
    ஆய்ந்த தமிழ் மாலை*  ஆயிரத்துள்- இவையும் ஓர் பத்தும் வல்லார்*  உலகில்- 
    ஏந்து பெரும் செல்வத்தராய்த்*  திருமால்- அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே*. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கூந்தல் - விலக்ஷணமான மயிர் முடியையுடையனான
மலர் மங்கைக்கும் - பெரியபிராட்டிக்கும்
மண் மடந்தைக்கும் - பூமிப்பிராட்டிக்கும்
குலம் ஆயர் கொழுந்துக்கும் - நல்லகுடிப்பிறப்பையுடைய நப்பின்னைப் பிராட்டிக்கும்
ஆய்ந்த - ஆராய்ந்து அருளிச் செய்த

விளக்க உரை

(கூந்தல் மலர்) இத்திருவாய்மொழியை ஓதவல்லவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமை செய்யப்பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. பிராட்டியானவள் எம்பெருமானயும் சேதநர்களையும் உபதேசத்தாலே திருத்தப்பார்ப்பள் என்றும்“, உபதேசம் கார்யகரமாகாகவிடில் சேதநனை அருளாலேயும் ஈச்வரனை அழகாலேயும் திருத்தப்பார்ப்பள் என்றும் ஆசாரியர்கள் நிர்வஹிப்பர்கள். அழகாலே ஆச்வரனைத் திருத்தும்போதைக்கு முதல் ஸாமக்ரி கூந்தலாகையாலே ‘கூந்தல் மலர்மங்கை’ என்கிறது. எம்பெருமான் தான் இடைக்குலத்திலே வந்து பிறந்தவாறே பிராட்டிதானும் இடைக்குலத்திலே வந்துபிறந்த நப்பின்னையென்று பேர்பெற்றளாளாதலால் “குலவாயர் கொழுந்து” என்றது. திருமாலடியார்களைப் பூசிக்க நோற்றார்கள் = திருமாலைப் பூசிப்பதிலுங்காட்டில் அவனடியார்களைப் பூசித்தலே சிறப்பாதலாலும், ஜந்மாந்தர ஸஹஸ்ர ஸுக்ருதத்தின் பயனாகவே அது நேரவேண்டுதலாலும் இங்ஙனேயருளிச் செய்யப்பட்டதென்க.

English Translation

This decad of the garland of thousand choicest Tamil sngs by Satakopan of fertile Valudi-Pandya kingdom kurugur addresses the Lord who is the consort of Sri, Bhu, and Nila. Those who can sing it will serve his devotees with great wealth,

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்