விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மேலும் வன்பழி நம்குடிக்கு இவள் என்று*  அன்னை காணக்கொடாள்* 
    சோலைசூழ் தண்திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*
    கோலநீள் கொடி மூக்கும்*  தாமரைக் கண்ணும் கனிவாயும்* 
    நீலமேனியும் நான்கு தோளும்*  என் நெஞ்சம் நிறைந்தனவே*.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இவன் இப்பெண்பிள்ளை
நம் குலக்கு நமது ப்ரபர்ரஸத்தானத்திற்கு
மேலும் காலமுள்ளதனையும்
வன் பழி என்று பெருத்த பழியாயிருப்பவன்’ என்று சொல்லி
அன்னை தாயானவள்
காணகொடான் நான் நம்பியை ஸேவிக்கவொண்ணாதபடி நடை நின்றாள்.

விளக்க உரை

(மேலும் வன்பழி.) படி கடவாப் பத்தினியாயிருக்க வேண்டிய இவள் படிகடந்து நடக்கின்றாளாதலால் நம் குடிக்கு இவள் பெரும்பழியை விளைப்பவளாயிராநின்றாளென்று கருதித் தாய்மார்கள் ‘இனி இவன் திருக்குறுங்குடி நம்பியைக் காணவொண்ணாதபடி செய்து விடுவதே கருமம்” என்று பேசிக்கொள்ளுகின்றார்கள்; அந்தோ! தண்ணீர்பெருகிச் சென்றபின்பு அணைக்கட்ட பாரிக்கு மாபோலேயிரா நின்றதாயிற்று இது; திருக்குறுங்குடி நம்பியை நான் காணப்பெறுவதற்கு முன்னமே இவர்கள் சேமித்திருக்கவேணும்; அது செய்யாதே இன்று மறுக்கப் பார்க்குமிவர்கட்குப் பயன் யாதாகுமோ? நான் நம்பியை ஸெவிக்கப்பெற்ற நாள் தொடங்கி, அப்பெருமானது திருமூக்கும் திருக்கண்ணும் திருவாயும் திருமேனியும் திருந்தோள்களுமே என்னெஞ்சை இடடைத்துக்கொண்டு கிடக்க இவர்களுடைய நிபந்தனைகள் இனி என்னாவது என்கிறாள்.

English Translation

After I saw the Lord of cool-grooved Tirukkurungudi, his beautiful slender nose, his lotus eyes, his coral lips, his blue frame, and his four shoulders, have filled my heart. My mother lets no one see me saying, "She will bring further blame to our fair name!".

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்