விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்*  என்னை முனியாதே 
    தென் நன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*
    மின்னு நூலும் குண்டலமும்*  மார்பில் திருமறுவும்* 
    மன்னு பூணும் நான்கு தோளும்*  வந்து எங்கும் நின்றிடுமே*.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மின்னும் நூலும் - பளபளவென்று ஜ்வலிக்கிற பூணூலும்.
குண்டலமும் - மகர குண்டலமும்
மார்பில் - திருமார்பில் விளங்குகின்ற
திருமறுவும் - ஸ்ரீவத்ஸமும்
மன்னு பூணும் - எப்போது கழற்றாத ஆபரணங்களும்

விளக்க உரை

(என்னெஞ்சினால்) ‘பெண்ணே! திருக்குறுங்குடி நம்பியை நீ மாத்திரையோ கண்டது; நாங்கள் கண்டதில்லையோ? நாங்களும் ஸேவித்தே யிருக்கிறோம்; ஆனாலும் உனக்கு இப்படிப்பட்ட முறைகேடு ஆகாது’ என்று தாய்மார் சொல்ல, அதற்குத் தலைமகள் கூறுகின்றாள். “என்னெஞ்சினால் நோக்கிக் காணீர்” என்று. என்னெஞ்சை இரவலாக வாங்கி வைத்துக்கொண்டு நீங்கள் நம்பியை ஸேவித்தீர்களாகில் இங்ஙனே என்னைப் பொடியமாட்டீர்களென்கை. நீ கண்ட காட்சிக்கு வாசியென்? என்று தாய்மார் கேட்க, நம்பியை நான் கண்டபின், மேகத்திலே மின்னினாப்போலேயிருக்கிற யஜ்ஞோபவிதமும், பரந்த மின் ஓரிடத்திலே சுழித்தாற்போலேயிருக்கிற மகர கண்டலமும், வெறுப்புறத்திலே ஆலத்திலழிக்க வேண்டும்படியிருக்கிற திருமார்பிலேகிடக்கிற ஸ்ரீவத்ஸலமும் திருவாபரணங்களும் திருத்தோள்களும் சுற்றும் வந்து என்னை நெருங்கா நின்றனவே! இதுவாயிற்று நான் கண்ட காட்சிக்கு வாசி யென்கிறாள். ‘தென்னவன் சோலை’ என்பதை, தென் நான் சோலை என்று பிரித்து, தெற்குத் திக்கிலேயுள்ளதாய் அழகியவான சோலையையுடைய என்றுரைப்பது தவிர, ‘தென்னன்’ என்று பாண்டியனுக்குப் பெயராய் அவன் கொண்டாடுமிடமாய் சோலைகளையுடையதான திருக்குறுங்குடி என்றுரைப்பதுமொன்று.

English Translation

Look through my heart's eyes; do not blame me, After I saw the Lord in Palmgroved Tirukkurungudi, his sacred thread, ear ornaments, mole-chest, beautiful jewels and four arms appear before me everywhere.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்