விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நின்று உருகுகின்றேனே போல*  நெடு வானம்* 
    சென்று உருகி நுண் துளி ஆய்*  செல்கின்ற கங்குல்வாய்* 
    அன்று ஒருகால் வையம்*  அளந்த பிரான் வாரான் என்று* 
    ஒன்று ஒருகால் சொல்லாது*  உலகோ உறங்குமே*      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நின்று உருகுகின்றேன் போல - நிரந்தரமாக உருகிக் கிடக்கிற என்னைப்போல
நெடுவானம் - பரந்த ஆகாசமானது
உருகி சென்று - உருகிப்போய் (அதனால்)
நுண் துளி ஆய் - நுண்ணிய பனித்துளியாய்
செல்கின்ற - நடந்து வருகின்ற

விளக்க உரை

(நின்றுருகுகின்றேனேபோல.) அந்தோ! நான் இப்பாடுபடா நிற்க இவ்வுலகில் எனக்குத் தேறுதல் கூறுவாருமில்லை! எல்லாரு முறங்கா நின்றார்களே! என்கிறாள். ஆகாசமானது இடைவிடாமல் பனித்துளியாய் இற்றுவிழா நின்றதென்று சொல்லப்புகுந்து அதற்குத்தன்னைத்தானே த்ருஷ்டாந்தமாக்குகிறாள் ‘நின்றுருகுகின்றேனே போல’ என்று. கீழே *வாயுந்திரையுகளில் “தோழியரும் யாமும்போல் நீராய் நெகிழ்கின்ற- வானமே!” என்றதை இங்கு நினைப்பது. நீர்ப்பண்டமாக உருகுகின்ற என்னைப்போலே நுண் துளியாய் இற்று உருகா நின்றதாயிற்று நெடுவானம் என்கிறாள். இப்படிப்பட்ட காலத்திலே உசாத்துணையாவார் கிணிருந்தால் ஒருவாறு கதை கேட்டுப்போதுபோக்கித் தரிக்கலாமே. உலகளந்த பெருமான் கதையை யெடுத்துக் கூறித் தப்பிக்கவுமாம். ‘அல்லது அந்த வஞ்சகன் நமக்கும் வஞ்சகனேயாவான் என்று சொல்லி ஆசையை யறுக்கவுமாம்; ஏதேனுமொன்றைச் சொல்லலாமே உலகம்; அந்தோ ! ஒன்றும் சொல்லாதே உறங்கா நின்றதே!

English Translation

Like me, the wide sky too melts pouring as fine droplets into the night, The world sleeps tight, alas, not once saying; The Lord who measured the Earth then shall not come.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்