விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வார் ஆரும் முலை மடவாள்*  வைதேவி தனைக் கண்டு* 
    சீர் ஆரும் திறல் அனுமன்*  தெரிந்து உரைத்த அடையாளம்* 
    பார் ஆரும் புகழ்ப் புதுவைப்*  பட்டர்பிரான் பாடல் வல்லார்* 
    ஏர் ஆரும் வைகுந்தத்து*  இமையவரோடு இருப்பாரே* (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வார் ஆரும் - கச்சு அணிந்திருக்கைக்கு உரிய;
முலை - முலையையும்;
மடலாள் - மடப்பத்தையுமுடையவளான;
வைதேவிதனை - ஸீதாபிராட்டியை;
கண்டு - பார்த்து;

விளக்க உரை

இதனால், இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டியவாறு, சீராருந் திறலநுமன்- வாநரர்கள் பலரிருக்கச் செய்தேயும் ‘இவனே இக்காரியஞ் செய்யவல்லான்’ என்று பெருமாள் திருவுள்ளம்பற்றி அடையாளங்களுஞ் சொல்லித் திருவாழியுங் கொடுத்துவிடும்படி ஜ்நுõகாதி குணங்களால் பரிபூர்ணனாய், நினைத்து முடிக்கவல்ல சத்தியமானாயிருக்கிற திருவடி. அடிவரவு:- நெறி அல்லி கலக்கிய வாரணி மான் சித்திர மின் மைத்தகு திக்கு வாராரும் கதிர்.

English Translation

This decad of sings by world famous Pattarbiran of Puduvai, Srivilliputtur, sing about the proofs that the mighty strong Hanuman knowingly said on seeing the corseted Sita is Asoka Vana. Those who master it shall live with the gods in good Vaikunta.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்