விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பெண் பிறந்தார் எய்தும்*  பெரும் துயர் காண்கிலேன் என்று* 
    ஒண் சுடரோன்*  வாராது ஒளித்தான்*  இம்மண்அளந்த-
    கண் பெரிய செவ்வாய்*  எம் கார் ஏறு வாரானால்* 
    எண் பெரிய சிந்தைநோய்*  தீர்ப்பார் ஆர் என்னையே?*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெண் பிறந்தார் எய்தும் பெண்ணாய்ப் பிறந்தவர்கள் அடைகின்ற
பெரு துயர் காண்கிலேன் என்று பெருந்துக்கத்தை காணமாட்டேன்’ என்றெண்ணி
ஒண் சுடரோன் ஸூரியன்
வாராது ஒளித்தான் வாராதே மறைந்து போனான் போலும்
இ மண் அளந்த இப்பூமியை யளந்து கொண்டவனும்

விளக்க உரை

(பெண் பிறந்தாரென்னும்) சண்டார்க்குப் பொறுக்க வொண்ணாதபடி நான் துன்பப்பட்டாநிற்க, எல்லாருடைய ஆபத்துக்களையும் போக்குவானான திரிவிக்கிரமன் வருகின்றிலன்; என்னுடைய சிந்தை நோய் தீரும்வழி என்னோ! என்கிறான். இரவு முப்பது நாழிகை கழிந்தவாறே ஸூரியன் உதிப்பதென்று ஒரு நியதியுண்டு; *** என்று உபநிஷத்தும் ஓதிவைத்தது; அப்படியிருக்க அந்த ஸூர்யன் உதிக்கவேயில்லை; ‘பெண்ணாய்ப் பிறந்தவர்கள் படும் துன்பத்தைக் காண்பதிற் காட்டிலும் நாம் முடிந்துபோவதே நன்று’ என்று துணிந்து அவன் முடிந்து போயினன் போலும் என்கிறாள். இரவு மிகவும் செல்லுகின்றமையை இங்ஙனம் கூறினாளாயிற்று. ஒண்சுடரோன் வாராதொளித்தான் என்றவிடத்து ஈட்டு ஸ்ரீஸூக்தி:- “தன் தோற்றரவிலே ஸகலலோகமும் போம்படியான ப்ரகாசத்தையுடையவனும் வாராதே மறைந்தான். ** என்னாரே ஒளிந்தானென்கிறது- *இத்யாதிப்படியே பகவதாஸ்ஸஞயாலே முப்பது வட்டம் வர வேணுமே; இங்ஙனே யிருக்கிறான் *** மறுத்தால் வேணுமாகில் தலையையறுத்து வைக்குமித்தனையன்றோ இக் கொடுமை என் கண்ணால் காணப்பாகா’ என்று *** தேடி வந்தாலும் காணாதபடியொளித்தான்.” ஸூர்யன் வந்தாலென்ன, ஒளிந்தாலென்ன? அவனைக் கொண்டு நமக்கொரு காரியமில்லையே. வடிவழகு முதலியவற்றால் என்னைத் தோற்பித்து எனக்குப் பரமயோக்யனாயிருந்தவன் எழுந்தருளிக்காட்சி தரவில்லையே; என் சிந்தை நோயைத் தீர்க்கவல்லனான அவன் வர திருக்கிறபடியாலே இனி என் சிந்தை நோய் அநுபவித்தே கழிக்குமித்தனைபோலும் என்றாளாயிற்று.

English Translation

Even the radiant Sun has hidden himself, unable to bear the sight of a maiden in distress. My black bull, the Lord with large eyes and red lips does not come. Alas, who can cure my love-sickness?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்