விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆவி காப்பார் இனி யார்?*  ஆழ் கடல் மண் விண் மூடி* 
    மா விகாரம் ஆய்*  ஓர் வல் இரவு ஆய் நீண்டதால்*
    காவி சேர் வண்ணன்*  என் கண்ணனும் வாரானால்* 
    பாவியேன் நெஞ்சமே!*  நீயும் பாங்கு அல்லையே?*.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆழ் கடல் - ஆழ்ந்த கடலையும்
மண்  - பூமியையும்
விண் - ஆகாசத்தையும்
மூடி - மறைத்து (இவ்வளவோடும் நில்லாமல் ஸகலலோகங்களையும் கபளீகரிக்கும்படி)
மா வீசாரம் ஆய் - பெரிய விகாரத்தையுடைந்தாய்கொண்டு

விளக்க உரை

(ஆலிகாப்பார்) இந்நிலைமையிலே கண்ணபிரானும் வந்து உதவுகின்றிலனே! என்று இன்னாதாகிறான். ஆய்ச்சியரோடு குரவைகோத்தவன்று அந்தரஸம் ஸாத்மிக்கைக்காக நெடும்போது மறைந்து நின்று அவர்களுக்கு மிகவும் அலமாப்பை விளைத்து, பிள்ளை *** - தாஸாம் ஆவிரபூத்சௌரி: ஸ்மயமாநமுகாம்புஜ: பீதாம்பரதா: ஸ்ரக்வீ ஸாக்ஷார் மந்மதமந்மத: என்கிறபடியே புன்முறுவல் காட்டிவந்து புகுந்துநின்றாற்போலே நமக்கும் வந்து முகங்காட்டுவன் என்றிருந்தால் போதும்; வரவில்லையே யென்ற கதறுகின்றாள். இனி ஆலிகாப்பார் ஆழ் = *குளிரருவிவேங்கடத்து என் கோவிந்தன் குணம்பாடி, அளியத்த மேகங்காள்! ஆவிகாத்திருப்பேனே * என்று குணாஸந்தானம் பண்ணி ஆத்மநாரணம் பண்ணுவதென்று ஒன்றுண்டு; உசாத்துணையில்லாமையாலே அதற்கும் வழியில்லையாயிற்று. *காக்குமியல்வினன் கண்ணபெருமான் * என்று காப்பதே தொழிலான கண்ணபிரானும் உபேஷித்தான்; ஆகையாலே இனி ஆவிகாப்பாது எங்ஙனே? (ஆழ்கடல் இத்யாதி.) கடலும் பூமியும் ஆகாசமும் எதுவும் தெரியாதபடி எல்லாவற்றையும் ஒன்றாக மறைத்துக் காளராத்திரியே நீண்டவளராநின்றது.

English Translation

A ghastly pall engulfs the Earth, sea and sky, stretching into one sinister night. My golden hued Krishna does not come, alas! O sinful heart, you too are not with me; who can save me now?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்