விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வலையுள் அகப்படுத்து*  என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு* 
    அலை கடல் பள்ளி அம்மானை*  ஆழிப்பிரான் தன்னை* 
    கலை கொள் அகல் அல்குல் தோழீ!*  நம் கண்களால் கண்டு* 
    தலையில் வணங்கவும் ஆம் கொலோ?*  தையலார் முன்பே*.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கலைகொள் - சேலை யணிந்ததும்
அகல் - அகன்றதுமான
அல்குல் - நிதம்பத்தையுடைய
தோழீ - தோழியே,
என்னை - என்னை

விளக்க உரை

(வலையுளகப்படுத்து.) எம்பெருமான் பக்கலில் குண ஹாஜி சொன்னவர்களுடைய வாய் அடங்கும்படி நாம் அவனைக் காணப்பெற்றுத் தலையாலே வணங்கலாம்படியான காலம் வாய்க்குமோ தோழீ என்கிறாள். என்னைத் தன்னுடைய குணசேஷ்டிதங்களாகிற வலையில் அகப்படுத்திக்கொண்டு *காற்றிற் கடியனாயோடித் திருப்பாற்கடலிலே புக்கொளித்த பெருமானைத் தோழீ! அவனுக்கு குணஹாகி சொல்லுகிற இந்தப் பெண்டுகள் கண்ணெதிரே நம் கண்ககளால் கண்டு தலையாலே வணங்கப்பெறுவோமே என்றாளாயிற்று. “தலையில் வணங்கவுமாங்கோலோ” என்றவிடத்து ஈட்டில் சுவைமிக்க ஓர் ஐதிஹ்யமுள்ளது. ராஜேந்த்ரசோழன் என்கிறவிடத்தில் கூரத்தாழ்வான் இப்பாசுரத்தை உபந்யஸித்தருளாநிற்கையில் ஆமருவிநிரை மேய்த்தான் நம்பியாரென்று நூறு பிராயம் போந்திருப்பாரொரு பெரியவர் நடுங்க நடுங்க எழுந்திருந்து நின்று “ஸ்வாமி! தலைமகள் தலையாலே வணங்கப் பெறுமோ?” என்று கேட்க, அதற்கு ஆழ்வான் ‘இதில் என்ன ஸந்தேஹம்? சிஷ்டாசாரமுண்டு காணும்; ஸ்ரீநாகராஜன் திருமகள் அநுஷ்டித்தான்காணும்’ என்று சொல்லி ***•••••••••••••••••••••••••• =கௌஸல்யா லோகபர்த்தாரம் ஸுஷுவேயம் மகஸ்விநீ, தம் மமார்த்தே ஸுகம் ப்ருச்ச திரஸா சாபிவாத* என்கிற (ஸுதையின் வாக்காகிய) ஸ்ரீராமாயணச்லோகத்தையெடுத்து விரியவுயந்யஸித்தருளினாராம்.

English Translation

The Lord who caught me in his dragnet and called my good heart unto him, reclines in the deep ocean with a discus in hand. O Sister, with broad jewelled hips! Will we ever see him with our eyes, and worship him in the presence of these fair ladies?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்