விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இறுக்கும் இறை இறுத்து உண்ண*  எவ் உலகுக்கும் தன் மூர்த்தி* 
    நிறுத்தினான் தெய்வங்கள் ஆக*  அத் தெய்வ நாயகன் தானே* 
    மறுத் திரு மார்வன் அவன் தன்*  பூதங்கள் கீதங்கள் பாடி* 
    வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார்*  மேவித் தொழுது உய்ம்மின் நீரே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இறுக்கும் இறை - அவரவர்கள் செலுத்த வேண்டிய கடன்களை
இறந்து - செலுத்தி
உண்ண - அவரவர்கள் வாழும்படி
எவ்வுலகுக்கும் - வேறுவேறு வகைப்பட்டருசியையுடைய ஸமஸ்தலோகத்துக்கும்
தன் மூர்த்தி - தன்னுடைய சரீரங்களை
தெய்வங்கள் ஆக - அந்தந்த கருமங்களினால் ஆராதிக்கைக்கு உரிய தேவதைகளாக

விளக்க உரை

இறுக்குமுறை) தேவதாந்தரங்களை ஆச்ரயித்து அபேக்ஷிதங்களைப் பெற்றவர்கள் இல்லையோவென்ன, அந்தத் தேவைகள் ஆச்ரிதர்களின் அபேக்ஷிதங்களைக் கொடுக்க சக்தர்களாம்படி பண்ணி வைத்தவன் எம்பெருமானே, ஆதலால் அவனை ஆச்ரயித்து உஜ்ஜீயுங்கோளென்கிறார். உலகத்தில் சக்கரவர்த்திக்கு நாம் செலுத்தவேண்டிய கப்பங்களை நேராகவே சக்ரவர்த்திக்குச் செலுத்துகிறோமோ? இல்லை, ஆங்காங்குப் பல அதிகாரி புருஷர்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றார்களாதலால் அவர்களிடம் நாம் செலுத்துகிறோம்; ஆனாலும் அவை அவர்களுக்குச் சேருவனவல்ல; அவரவர்கள் செலுத்தும் கப்பங்களை வாங்கிக்கொள்வதற்காக அரசர்பெருமானால் அதிகாரி புருஷர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளார்கள் என்கிற தத்துவத்தை உலகில் நாம் எளிதாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம். இவ்வண்ணமாகவே கைலதேவதாநாயகனான எம்பெருமாள் தானும், நாம் செலுத்த வேண்டிய ஆராதனைகளைச் செலுத்துவதற்காக இதர தேவதைகளை லோகமடங்கலும் பரப்பிவைத்துள்ளான். அந்தத் தேவதைகளுக்கு ஸ்வதந்திரமாக ஒரு சக்தியுண்டென்று நினையாதர்கள். சரீரபூதர்களான அந்தத் தேவதைகளின் வழியாக எம்பெருமானை ஆச்ரயிப்பதிற்காட்டிலும் ஸரக்ஷாத்தாகவே அவனை ஆச்ரயித்தல் அழகியது. அப்படிப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் இப்போது இவ்வுலகில் நிரம்பியுள்ளார்கள். நீங்களும் எம்பெருமானையே அநர்யப்ரயோஜநராய்க்கொண்டு ஆச்ரவித்து உஜ்ஜீவியுங்கோள் என்றாராயிற்று.

English Translation

He is the Lord of gods, himself becoming the gods in all the world. If is he who accepts the offering you make to your gods. The spirits of the mole-chested Lord have filled the Earth singing songs. So shed hatred, cultivate love; offer worship and liberate yourselves.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்