விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொன்று உயிர் உண்ணும் விசாதி*  பகை பசி தீயன எல்லாம்* 
    நின்று இவ் உலகில் கடிவான்*  நேமிப் பிரான் தமர் போந்தார்* 
    நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும்*  ஞாலம் பரந்தார்* 
    சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர்!*  சிந்தையைச் செந்நிறுத்தியே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொன்று - கொலைசெய்து
உயிர் உண்ணும் - பிராணனைமுடிக்குமதான
விசாதி - வியாதியும்
பகை - துவேஷமும்
பசி - பசியும் (முதலான)

விளக்க உரை

(கொன்றுயிருண்ணும்.) இந்த ஸம்ஸாரநிலத்திற்குரிய ஸகலக்லேசங்களும் தீரும்படி பாகவதர்கள் ஜகத்öங்கும் பரந்தார்கள், அவர்களை ஆச்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்! என்று, கீழ்ச் சொன்னவர்களை நோக்கியருளிச்செய்கிறார். விசாதியென்ற வியாதியைச் சொல்லுகிறது. வியாதியென்றும் பகையென்றும் பசியென்றும் சில கெடுதல்களைத் தனித்தனியே பிரியச்சொல்லிவந்து, தீயனவெல்லாம் என்று ஸமுதாயமாக அருளிச்செய்கிறார். இவ்வுலகில் கெடுதல்களாக எவ்வெவையுண்டோ அவையெல்லாவற்றையும் என்றபடி. ***= யத்ராஷ்டக்ஷரஸம்ஸித்தோ மஹாபாகோ மஹீயதோ, ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்வாதி துர்ப்பிக்ஷதஸ்கரர்* (திருவஷ்டாக்ஷாஸித்தியுடைய மஹாபாகவதர் ஒருவர் வாழுமிடத்தில் வியாதியோ பஞ்சமோ கள்வரோ தலைகாட்ட நேராது. என்கிற பிரமாணத்தின்படியே இப்பாட்டின் முன்னடிகள் அமைந்திருக்கின்றன.

English Translation

The discus-Lord's devotees have come to stay, to rid the world of soul-consuming disease, war, hunger and evil. They have spread everywhere, singing in mirth and dancing in ecstacy, Cease thought, Devotees! Go, worship them and be saved.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்