விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொலிக பொலிக பொலிக!*  போயிற்று வல் உயிர்ச் சாபம்* 
    நலியும் நரகமும் நைந்த*  நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை*
    கலியும் கெடும் கண்டுகொண்மின்*  கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்* 
    மலியப் புகுந்து இசைபாடி*  ஆடி உழிதரக் கண்டோம்*. (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பொலிக பொலிக பொலிக - வாழ்க! வாழ்க! வாழ்க!
உயிர் - ஜீவராசிகளுக்குண்டான
வல் - வலிதான
நைந்த - அழிந்துபோன
இங்கு-  இவ்விபூதியில்

விளக்க உரை

(பொலிக பொலிக.) இந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்திக்கு எப்போதும் ஒரு குறைவில்லாமலிருக்க வேனுமென்று காப்பிடுகிறார். *** என்று வேதம் மும்முறை ஓதுமாபோலே இருக்கும் “பொலிக பொலிக பொலிக” என்று மும்முறை ஓதுகிறபடி.போயிற்று வல்லுயிர்ச்சாபம் = சாபம் என்கிறது பாபத்தை; அவசியம் அனுபவித்தே தீரவேண்டுகையாலே. ஆத்மாவைப்பற்றிக் கிடந்த அவித்யை முதலானவை தொலைந்துபோயினவென்றபடி. நலியும் நரகமும் நைந்த = இனி நரகங்களை யநுபவிக்க ஆளில்லாமையாலே அவை புல்லெழுந்தொழிந்தனவென்கை. ‘நைந்த’ என்றது நைந்தன என்றபடி; அன்சாரியை பெறாத பலவின்பால் இறந்தகாலவினைமுற்று. நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை = யமன் ஆராய்ச்சி செய்வதற்கு இங்கு விஷயமொன்றுமில்லை. யமலோகம் புகுவார் இருந்தாலன்றோ அவன் கணக்குப் பார்க்கவேண்டுவது. “சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோள் பொறியொற்றி வைத்தவிலச்சினை மாற்றித் தூதுவரோடி யொளித்தார்” என்னும்படியாயிற்றென்கை.

English Translation

Hail! Hail! Hail!, gone is the curse of existence. Hell has relented, Yama has no work here anymore, even Kali shall end, just see! The ocean-hued Lord's spirits have descended on Earth in hordes. We have seen them singing and dancing everywhere

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்