விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கார்வண்ணன் கண்ண பிரான்*  கமலத்தடங்கண்ணன் தன்னை,* 
    ஏர்வள ஒண்கழனிக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
    சீர் வண்ணம் ஒண்தமிழ்கள்*  இவை ஆயிரத்துள் இப்பத்தும்* 
    ஆர்வண்ணத்தால் உரைப்பார்*  அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கார் வண்ணன் - மேகவண்ணனும்
கண்ணபிரான் - ஸர்வஸுலபனும்
கமலம் தட கண்ணன் தன்னை - தாமரைபோன்ற விசாலமான திருக்கண்களையுடையனுமான எம் பெருமானைக் குறித்து.
ஏர் வளம் ஒண் கழனி - எங்களின் மிகுதியையுடைத்தாய் அழகியவான கழனிகளையுடைய

விளக்க உரை

- (கார்வண்ணன்.) இப்பத்தும் வல்லவர் ஸ்ரீவைஷ்ணன் ஸ்ரீமிக்கவர்களாய்க் கொண்டு எம்பெருமான் திருவடிக்கீழே புகுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். காளமேக ச்யாமளனாய்ச் செந்தாமரைக் கண்ணனாய் ஆச்ரித ஸுலபனான எம்பெருமானைக் குறித்துக்கொள்ள இத்திருவாய்மொழியை அம்ருத பானம் பண்ணுவாரைப்போலே சொல்லவல்லவர்கள் “எம்பெருமானாரைப் போலே ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயோடேமிருந்து” பின்பு தாய் நிழலிலே யொதுங்குவாரைப்போலே அவள் திருவடிகளிலே புகப்பெறுவர் என்றதாயிற்று. ஆர்வண்ணத்தால் = ஆர் தலாவது பானம் பண்ணுதல்; பட்டர் ஸ்ரீகுணரத்ன கோளத்திலே “ஸூக்திம் ஸமக்ரயது... யாம் கண்டூல கர்ண குஹரா: கவயோ யயஸ்ரீ” சொற்களைச் சொல்லும்போது ஏனோதானோ என்று சொல்லுகையற்றின்கே நெஞ்சுகனிந்து சொல்லவேணும்; அம்ருதபானம் பண்ணுவதாகவே நினைக்கவேணும்.

English Translation

This decad of the thousand pure Tamil songs, by Satakopan of kurugru surrounded by bullock-ploughed fields, addresses the dark hued Lord of lotus-red eyes. Those who sing it shall rise and attain his lotus feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்