விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விளம்பும் ஆறு சமயமும்*  அவைஆகியும் மற்றும் தன்பால்,* 
    அளந்து காண்டற்கு அரியன் ஆகிய*  ஆதிப்பிரான் அமரும்,* 
    வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய*  திருக்குருகூர் அதனை,* 
    உளம் கொள் ஞானத்து வைம்மின்*  உம்மை உய்யக்கொண்டு போகுறிலே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விளம்பும் - கண்டபடி சொல்லுவது தவிரப் பொருட்பொருத்தம் சிறிதுமில்லாதவைகளான
ஆறு சமயமும் - ஆறுவகைப்பட்ட பாஹ்ய மதங்களும்
அவை ஆகிய - அந்த பாஹ்யமதங்கட்குப் பரியாயமான
மற்றும் - குத்ருஷ்டி மதங்களும்
தன் பால் - தன் விஷயத்திலே

விளக்க உரை

வேதபாஹ்யர்களும் குத்ருஷ்டிகளும் பண்ணுகிற துஸ்தர்க்கங்களால் அழிக்கவொண்ணாத ஐச்வர்யத்தையுடையனான எம்பெருமானெழுந்தருளியிருக்கிற திருநகரியை ஆச்ரயியுங்கோள் பிழைக்கவேண்டியிருந்தீர்களாகில் என்கிறார். வேதம் முதலிய சாஸ்த்ரங்களை ப்ரமணமாக இசையாதவர்கள் வேத பரஹ்யர்கள் எனப்படுவர்; அவற்றை ப்ரமாணமாக இசைந்துவைத்தும் அவற்றுக்குத் தவறான அர்த்தங்களைப்; பண்ணுமவர்கள் (அதாவது) எம்பெருமானொருவன் தவிர மற்ற தத்துவமொன்றுமேயில்லையென்றும், அவனுக்குத் குணமில்லை, நிக்ரஹமில்லை யென்றும் சொல்லுமவர்கள் குத்ருஷ்டிகளெனப்படுவார்; இவ்விருவகுப்பினரையும்பற்றிக் கூரத்தாழ்வான் ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில் ஒரு ச்லோக மருளிச்செய்கிறார்; அதாவது-*…- பாஹ்யா: குத்ருஷ்டய இதித்விதயேப்பாரம் கோரம் தமஸ் ஸமுபயாந்தி நஹீக்ஷஸே தாந், ஜக்தஸய காநநம்ருகைர் ம்ருகத்ருஷ்ணிகேப்ஸோ: காஸாரஸத்வநிஹதஸ்ய ச கோ விசேஷ:?* என்பதாம். இதன் பகவத் கடாக்ஷத்திற்கு இலக்காகமாட்டாமல் நசித்துப்போவர்கள். வேதத்தை அடியோடே ப்ரமாணமாக அங்கீகரியாதே துர்ஷிக்கின்ற பாஹ்யர்கள் நசித்துப்போவது யுக்தம்; அப்படியல்லாமல் வேதத்தை ப்ரமாணமாக அங்கீகரித்து வைதிகர்களென்று பேர்பெற்றிருக்கின்றவர்களும் நசித்துப்போவர்களென்னலாமோ என்ன; இருவகுப்பினரும் துல்ய யோகக்ஷேமர்களேயென்பது ஒரு த்ருஷ்டாந்த முகத்தாலே மூதலிக்கப்படுகிறது; விடாய்மிகுத்துத் தண்ணீரைத் தேடியோட இரண்டு ம்ருகங்கள் புறப்பட்டன; அவற்றில் ஒரு ம்ருகமானது தடாகத்தில் புகாதே கானலைக்கண்டு தண்ணீர்ப்பெருக்காக மயங்கி ஓடிக் கொண்டேயிருக்கையில் வழியிடையிலே நேர்பட்ட புலி முதலிய கொடிய விலங்குகளினால் அடித்துத் தின்னப்பட்டதாயிற்று.

English Translation

The six expounded doctrines and those like them cannot fathom Him; thus he sits, as Adipiran in kurugur surrounded by beautiful fields. If you seek liberation, bear him in your heart

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்