விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட*  மார்க்கண்டேயன் அவனை* 
    நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது*  நாராயணன் அருளே*
    கொக்கு அலர் தடம் தாழை வேலித்*  திருக்குருகூர் அதனுள்* 
    மிக்க ஆதிப்பிரான் நிற்க*  மற்றைத் தெய்வம் விளம்புதிரே   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அடிமையினால் - அடிமைசெய்து
புக்கு - உள்புகுந்து
தன்னை கண்ட - தன்னைக்காணப்பெற்ற
மார்க்கண்டேயனவனை - மார்க்கண்டேயனென்று ப்ரஸித்த னானவனை
அன்று - அக்காலத்தில்

விளக்க உரை

மார்க்கண்டேயன் ருத்ரனை ஆராதித்துத் தன் அபேகூஷிதம் பெற்றானேயென்று சிலர்சொல்ல, அந்தக்கதையின் மருமமும் கேட்கலாகாதோ வென்கிறார். மருகண்டு வென்னும் முனிவர் பி;ள்ளையில்லாக்குறையினால் பிரமனைக்குறித்துத் தவஞ் செய்தபோது, பிரமன் ப்ரத்யக்ஷமாகி ‘முனிவரே! அறிவில்லாமையும் அங்கஹீநத்வமும் பெரும் பிணியும் தீயகுணங்களுமுடையவனாய் பதினாறு பிராயமே வாழ்பவனான குமாரனை விரும்புகின்றீரோ? அன்றி, கூர்மையான புத்தியும் அழகு பொலிந்தவடிவமும் ஆரோக்கியமும் நற்குணமுமுடையவனாய்ப் பதினாறு பிராயமே வாழ்பவனான குமாரனை விரும்புகின்றீரோ? சொல்லும்’ என்ன, முனிவர், ‘ஆயள் சிறிதேனும் அறிவும் அழகும் குணமும் சிறந்து பிணியிலானாகும் ஸத்புத்ரனையே வேண்டுகின்றேன்’ என்று தம் கருத்தைக்கூற, நான்முகக்கடவுள்: (புராணபேத்த்தால்இக்கதை சிறிது பேதப்படுவதுண்டு, பிராமனுடைய அநுக்ரஹத்தினால் ம்ருகண்டு முனிவதற்குப் பிள்ளை பிறந்த்தாகவும், அப்பிள்ளை ஒருநாள் வீதியில் விளையாடிக்கொண்டிருக்கிற்று, என்று ஆகாசவாணியொன்று செவிப்பட, அதனால் அத்தாய் தந்தையர் மிக்க வருத்தங்கொண்டதாகவும், அதுகண்ட மார்க்கண்டேயன் இதற்கு நீங்கள் வருந்தவேண்டா, இவ்வாபத்தை நானே போக்கிக்கொள்ளுகிறேன் என்று அவர்களைத் தேற்றித் தான் சிவபூஜை செய்யத் தொடங்கினென்பதாகவும் சில புராணங்கள் கூறும். ) அவ்வாறே அநுக்ரஹித்தனர். அங்ஙனம் ஊழ்வினையாற் பதினாறுயிராயம்பெற்றுப் பிறந்த புத்திரனான மார்க்கண்டேயன் தனது அல்பாயுஸ்ஸைக்குறிதது வருந்திய தாய்தந்தையரைத்தேற்றித் தான் விதியைக் கடந்து வருவதாகச்சொல்லி, தீர்க்காயுஸ்ஸூ பெறுதற் பொருட்;டுத் தினந்தோறும் சிவபூஜை செய்துவருகையில் ஒருநாள் யமன் துர்தரையனுப்ப, அவர்கள் மார்கண்டேயனது தவக்கனலால் அவனை அணுகமாட்டாது அவன் செய்யும் சிவபூஜைச் சிறப்பைக்கண்டஞ்சி வெருண்டோடி யமனிடம் செய்திசொல்ல, யமனும் கோபித்துத் தனது மந்திரியான காலனை ஏவ, அவன் வந்து நயபயங்களாவழைக்கவும் மார்க்கண்டேயன் வரமாட்டேனென்று சொல்லிவிட, பிறகு யமன் சிவலிங்கமுட்பட வலித்திழுக்கும்போது சிவபிரான் ஸ்ரீமந்நாராயணனைத் சிந்தைசெய்து அவனது திருவருள்பெற்று அங்குநின்று வெளிப்பட்டு யமனைக் காலாலுதைத்துத் தள்ளி முனிமகனுக்கு என்றும் பதினாறு பிராயமாகவே அனேக கல்பகாலமாகவும் இனிது வாழும்படி தீர்க்காயுஸ்;ஸைக் கொடுத்தருளினன் என்பதுவரலாறு.

English Translation

Then it was Narayana's grace which protected Markandeya, when he took refuge in the naked-god Siva. When the great Adipiran stands. In kurugur city surrounded by stork-white pandanus hedges, what other god do you praise?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்