விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    போற்றி மற்று ஓர் தெய்வம்*  பேணப் புறத்திட்டு*  உம்மை இன்னே 
    தேற்றி வைத்தது*  எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே,* 
    சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு*  திருக்குருகூர் அதனுள்,* 
    ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர்*  அது அறிந்து அறிந்து ஓடுமினே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மற்று ஓர் தெய்வம் - வேறோரு தேவதையை
போற்றி பேண - துதிக்கு ஆதரிக்கும்படியாக
புறத்து இட்டு - வேறுபடுத்தி
உம்மை - உங்களை
இன்னே - இப்போதுநீங்களிருக்கிற விதமாக

விளக்க உரை

ஸ்ரீமந்நாராயணனே ஸர்வேச்வரனாகில் அவன் தன்னையே ஆச்ரயிக்கும்படி எங்களைப் பண்ணாமல் இதர தெய்வங்களைத் தொழுமாறு எங்களைச் செய்துவைத்தது ஏன்? என்று சிலர்கேட்பதாகக் கொண்டு அவர்களுக்கு உத்தரமளிக்கும் பாசுரம் இது. உங்கள் பாபந்தான் அதற்குக் காரணம் என்று விடை கூறிற்றாகிறது. இப்பாசுரத்தில் எல்லீரும் வீடுபெற்றால் உலகில்லையென்றே என்பது தான் மருமமாகவுள்ளது. ஆபாதப்ரதீதியில் இதற்கு என்னபொருள் தோன்று மென்றால், எல்லாரும் ஸ்ரீமந்நாராயணனையே தொழப்பெற்றால், எல்லாருமே வீடுபெற்றுவிட்டால் லீலா விபூதி அடியற்றுப்போய்விடும்; அங்ஙனம் போகாமைக்காகவே எம்பெருமான் உங்களை இதர தேவதாபஜநம் பண்ணி ஸம்ஸாரிகளாய்த் தொலைந்துபோம்படி செய்துவைத்தான்-என்பதாகப் பொருள்தோன்றும். இப்படிப்பட்ட பொருள் எம்பெருமானுக்கு மிக்க அவத்யத்தை விளைக்குமதாகையாலே ஆழ்வார் இப்பொருள்பட அருளிச்செய்ய பரஸக்தியில்லை; ஆறாயிரப்படி முதலிய வியாக்கியானங்களில் இங்ஙனே பொருள் நெஞ்சாலும் நினைக்கப்படவில்லை. ஆனால், திருவாயமொழிக்கு ஸம்ஸ்க்ருதப்பதவுரையிட்டு (ஒன்பதாயிரப்படி இயற்றிய) தசோபநிஷத்பாஷ்யகாரரான ஸ்ரீரங்கராமாநுஜஸ்வாமி இப்பொருளையே பணித்து வைத்தார்; அவருடைய வாக்கியம் வருமாறு;-.....” என்பதாம்

English Translation

You who desolately worship lowly gods have been relegated to this, because if liberation is given to all, there will be no world then. This is the sport of the clever Lord of Kurugur city where golden paddy and lotus flowers abound; figure this out and run

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்