விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இலிங்கத்து இட்ட புராணத்தீரும்*  சமணரும் சாக்கியரும்* 
    வலிந்து வாது செய்வீர்களும்*  மற்றும் நும் தெய்வமும் ஆகிநின்றான்* 
    மலிந்து செந்நெல் கவரி வீசும்*  திருக்குருகூர் அதனுள்,* 
    பொலிந்து நின்ற பிரான் கண்டீர்*  ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே. (2)     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இலிங்கத்து இட்ட புராணத்தீரும் – லிங்கமாஹாத்மிய விஷயமாகக் கல்பிக்கப்பட்ட புராணத்தைப் பற்றினவர்களாயும்
சமணரும் – ஜைநர்களாயும்
சாக்கியரும் – பௌநர்களாயும்
வலிந்து வாது – விதண்டாவாதம் செய்பவர்களாயுமிருக்கிற நீங்களாகவும்

விளக்க உரை

லைங்கபுராணம் முதலாகச் சில குத்ருஷ்டி ஸ்ம்ருதிகளையும் பாஹ்யஸ்ம்ருதிகளையும் பிரமாணமாக்க் கொண்டு பேசவந்தவர்களை நிராகரித்தருளுகிறார். புராணங்களானவை ராஜஸங்களென்றும் தாமஸங்களென்றும் ஸாத்விகங்களென்றும் பாகுபாடுற்றிருக்கின்றன. “***“ – அக்நேச்சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரதீர்த்திதம், ராஜஸேஷு சமாஹாத்ம்யம் அதிகம் ப்ரஹ்மணோவிது, ஸாத்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்யம் அதிகம் ஹரோ ஸங்கீர்ணேஷு ஸரஸ்வத்யா, பித்ரூணாம் ச நிகத்யதே. (தாமஸகல்பங்களில் அக்நியினுடையவும் சிவனுடையவும் மாஹாத்மிபத்தையும், ராஜஸகல்பங்களில் நான்முகனுடைய மாஹாத்மியத்தையும், ஸாத்விககல்பங்களில் பித்ருக்களினுடையவும் ஸரஸ்வதியினுடையவும் மாஹாத்மியத்தையும் பேசியிருப்பதாக மஹர்ஷிகளே கூறிவைத்தார்கள். ஸ்ரீவிஷ்ணுபுராணம் எப்படி அவதரித்திருக்கின்றதென்பதைச் சிறிது உற்றுப்பார்க்கவேணும், “***“ யந்மயம் சஜகத் ப்ரஹ்மந் யதச்சைதச் சராசரம், லீநமாஸீத் யதா யத்ர லயமேஷ்யதி யத்ர ச. * என்று பொதுவிலே கேள்விகேட்க, “***“-விஷ்ணோஸ் ஸகாஸாத் உத்பூதம் ஜகத் த்த்ரைவ ச ஸ்திகம், ஸ்திதிஸம்யம கர்த்தாஸௌ ஜகதோஸ்ப ஜகச் ச ஸ. * என்று விடை அழகாக அவதரித்திருக்கின்றது. இப்படியல்லாமல், எருமையை யானையாக்க் கவிபாடித்தரவேணு மென்பாரைப் போலே லிங்கத்துக்குப் பெருமையிட்டுச் சொல்லவேணுமென்று கேள்வியாய், அதன்மேற்பிறந்த்து லிங்கபுராணமாகையாலே இலிங்கத்து இட்ட புராணத்தீரும் என்று ஆழ்வார் மருமத்தை வெளியிட்டுப் பேசியிருளினாராயிற்று. “***“ – வேதபாஹ்யா, ஸ்ம்ருதயோ யாச் ச காச் ச குத்ருஷ்டய, ஸர்வஸ் தா நிஷ்பலா, தமோநிஷ்டாஹி தா, ஸ்ம்ருகா. * என்று மநுமஹர்ஷி சொல்லிவைத்ததும் அறியத்தக்கது.

English Translation

Look ye, all those who quote the Lings-purana, Ye jainas and Bauddhas! Instead of arguing endlessly, offer praise to the Lord who stands in Kurugur, where tall ears of paddy sway gently in the wind like whisks, He is you and all your gods, this is no lie.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்