விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும்*  பிறர்க்கும் 
    நாயகன் அவனே,*  கபால நல் மோக்கத்துக்*  கண்டுகொண்மின்,* 
    தேச மாமதிள் சூழ்ந்து அழகு ஆய*  திருக்குருகூர் அதனுள்,* 
    ஈசன்பால் ஓர் அவம் பறைதல்*  என் ஆவது இலிங்கியர்க்கே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பேசநின்ற – உங்களால் பரதெய்வமாகப் பேசப்படுகின்ற
சிவனுக்கும் – ருத்ரனுக்கும்
பிரமன் தனக்கும் – (அவனது தந்தையான) பிரமனுக்கும்
பிறர்க்கும் – மற்றுமுள்ள தேவதைகளுக்கும்
நாயகன் அவனே – தலைவன் ஸ்ரீமந்நாராயணனே என்னுமிடத்தை

விளக்க உரை

அநுமாநத்தாலே ஈச்வரனை ஸாதிக்கவிரும்புமவர்களும் பசுபதியே ஸர்வேச்வரனென்று கூறுபவர்களுமான சிலரை இப்பாசுரத்தாலே நிராகரித்தருளுகிறார். இலிங்கியர்க்கு என்றது ஹேதுவாதிகளுக்கு என்றபடி, அநுமானத்தைக் கொள்பவர்களே ஹேதுவாதிகளாவர்கள். சப்தப்ரமாணமான சாஸ்த்ரத்தின் முன்னே வேறு எந் ப்ரமாணமும் நிற்கமாட்டாதாகையாலே அந்த சாஸ்த்ரத்தின் முன்னே வேறு எந்த ப்ரமாணமும் நிற்கமாட்டாதாகையாலே அந்த சாஸ்த்ரப்ரமாண விருத்தமாக இலிங்கியர் பேசுவது பொருளற்றது என்று நிரூபிக்கிறார். இலிங்கியர் – லிங்கவாதிகள், லிங்கமாவது ஹேது, அநுமாநமென்கை. ஒரு காலத்திலே பரமசிவன் தன்னைப்போலவே பிரமனும் ஐந்து தலையுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குதற்கு இடமாயிருக்கின்ற தென்று கருதி “அவனது சிரமொன்றைக் கிள்ளியெடுத்துவிட, அக்கபாலம் அப்படியே சிவன் கையில் ஒட்டிக்கொள்ளுதலும் அவன் ‘இதற்கு என்னசெய்வது‘ என்று கவலைப்பட, தேவர்களும் முனிவர்களும், ‘இப்பாவந்தொலையப் பிச்சையெடுக்கவேண்டும், என்றைக்குக் கபாலம் நிறையுமோ அன்றைக்கே இது கையைவிட்டு அகலும்‘ என்று உரைக்க, சிவபிரான் பலகாலம் பல தலங்களிலுஞ்சென்று பிச்சையேற்றுக்கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக, பின்பு ஒருநாள் பதரிகாச்ரமத்தையடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி இரந்தபோது அப்பெருமான் அக்ஷயம் என்று பிக்ஷையிட உடனே அதுநிறைந்து கையைவிட்டு அகன்றது என்பது கபாலநன்மோக்க வரலாறு. கொலையுண்பவனும் கொலை செய்பவனுமான பிரமனும் உருத்திரனும் பரதெய்வமாக இருக்கத்தகுதியுடையரல்லரென்பது இக்கதையினால் தெற்றெனவிளங்கும்.

English Translation

He is the lord of sive, Brahma and the other gods you speak of. See this for yourself in Kapala Moksha, the redemption of Siva. Now how does it help the Linga – worshippers to speak ill of the Lord, who resides in radiant kurugur city surrounded by walls?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்