விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும்*  ஐங்கருவி 
    கண்ட இன்பம்,*  தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்,*
    ஒண் தொடியாள் திருமகளும்*  நீயுமே நிலாநிற்ப,* 
    கண்ட சதிர் கண்டொழிந்தேன்*  அடைந்தேன் உன் திருவடியே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒண் தொடியாள் - அழகிய கைகளையுடையளாகிய
திரு மகளும் - பெரிய பிராட்டியாரும்
நீயுமே - அவளுடைய நாயகனான நீயுமே
நிலா நிற்ப கண்ட சதிர் - களித்து வாழ்கிற அழகிய இருப்பை
கண்டு - இப்போது காணப்பெற்று

விளக்க உரை

கீழ்ப்பாசுரத்தில் ப்ரஸங்கித்தபேற்றை உகப்பின் மிகுதியாலே இன்னமும் பன்னியுரைக்கின்றாரிதில். ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்கண்ட சதிர்கண்டு-கண்டுகேட்டுற்று மோந்துண்டுழலுமைங் கருவிகண்ட வின்பமும் தெரிவரிய வளவில்லாச் சிற்றின்பமும் ஒழிந்தேன், உன்; திருவடியே அடைந்தேன்-என்று அந்வயிப்பது. *** = வைகுண்ட து பரே லோக ச்ரியா ஸார்த்தம் ஜகத் பதி:இ ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா.” என்கிறபடியே தன் திருமாதுடனே தான் தனியரசாயுறைகின்ற விருப்பை எம்பெருமான் ஆழ்வார்க்குக் காட்டிக் கொடுத்தருளினனாதலால் “ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக்கண்ட சதிர்கண்டு” என்கிறார். தொடி என்று கைவளைக்குப்பெயர்; ஒளிபொருந்திய கைவளைகளையுடையவள் என்று பிராட்டிக்கு இவ்வடைமொழி கொடுத்ததனால். க்ஷணகாலமும் விட்டுப் பிரியாதவள் என்பது பெறப்படும். இவ்விடத்தில் *** = யாமி ந யாமீதி தவே வததி புரஸ்தாத் க்ஷணேந தந்வங்க்யா:. களிதாநி புரோவலயாநி அபராணி புநஸ் ததைவ தவீதாநி,” என்ற சுலோகத்தின் தாற்பரியம் நினைக்கத்தகும்.

English Translation

I have experienced the pleasure of seeing, hearing, touch, smell and taste, and the limited joy of heaven that lies beyond the senses, Only you and the fair-bangled Lakshmi are permanent, My Lord, what a wonder that I have attained your lotus feet!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்