விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வரி வளையால் குறைவு இல்லாப்*  பெரு முழக்கால் அடங்காரை,* 
    எரி அழலம் புக ஊதி*  இரு நிலம் முன் துயர் தவிர்த்த,* 
    தெரிவு அரிய சிவன் பிரமன்*  அமரர் கோன் பணிந்து ஏத்தும்,* 
    விரி புகழான் கவராத*  மேகலையால் குறைவு இலமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாவளையல் - வரிகளையுடைய சங்கில் நின்று முண்டான
குறைவு இல்லா பெருமுழக்கால் - மிக பெரிய கோஷத்தினலே
எரி அழலம் - கிளர்ந்தெரிகிற (பயமாகிற) அக்கியானது
அடங்காரை புக - பகைவர்களிடத்துப் புகும்படியாக
ஊதி இரு நிலம் - (சங்கை) ஊதி விசாலமான பூமண்டலத்தினுடைய

விளக்க உரை

(வரிவளையால்.) மண்ணின்பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்து விரோதிகளைத் தொலைத்து அமரர்கள் துதிக்க நின்ற பெருமான் விருமாபாத மேகலை எனக்கு ஏதுக்கென்கிறாள். வரிவளையால் என்கிற பதம் ‘குறைவில்லா’ என்பதில் அந்வயிப்பன்று, பெருமுழக்கால்’ என்பதில் அந்வயிப்பதாகும்; ஸ்ரீபாஞ்சஜந்யத்தாலுண்டான மஹாகோஷத்தாலே’ என்றபடி. “படைபோர்ப்புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியம்” என்கிறபடியே பாஞ்சசன்னியம் முழங்கின்னவளவிலேயே எதிரிகள் குடல் குழம்பிக் குமுழறிபோவர்கள். பாரதயுத்தம் பிரகாணங்களில் இதன் பெருமை அறியத்தக்கது. கண்ணபிரானையன்றி மற்று எவனையும் கனவிலுங் கருதாதிருந்த ருக்மிணிப்பராட்டித்து சிசுபாலனோடு விவாஹம நடத்துவதாகக் கோடித்து வித்தமாயிருந்த ஸமயத்தில் கண்ணவிரானது வரவை யெதிர்பார்த்திருக்க அப்பிராட்டியின் நெஞ்சு முதிந்துபோய் இனி நாம் உயிர் துறப்பதே நல்லுபாயம் என்று நிச்சயித்திருந்த க்ஷணத்தில் கண்ணவிரான் மிகவிரைந்து எழுந்தருளிப் புறச்சோலையிலே நின்று தனது ஸ்ரீபாஞ்சஜந்த்தைத் திருப்பவளத்திலே வைத்து ஊத, அவ்வோசை ருக்மிணிப்பிராட்டியை மகிழ்வித்தளவேயன்றி, சிசுபாலனையும் அவனைச்சார்ந்தவர்களையும் எரியழலம் புகழ்செய்தமை ப்ரஸித்தம; இப்படிப்பட்ட இதிஹாஸங்கள் இங்குக் கொள்ளத்தக்கன. (தெரிவரிய இத்யாதி.) எம்பெருமான் எங்கெங்கு வெற்றிபெற்று நிற்கின்றனோ அங்கங்கெல்லாம் சிவனும் பிரமனுமிந்திரனும் முதலானவர்கள் பணிந்து ஏத்துவர்கள்; அப்படி அவர்கள் ஏத்துவது பாபரனான எம்பெருமானுக்கு ஒரு பெருமையன்றாகிலும், துர்மானங் கொண்டாடித் திரியும் அத்தெய்வங்கள் அந்த துர்மானந் தவிர்ந்து காலவிசேஷங்களிலே எம்பெருமானைப் பணிந்தேத்துகை அவர்களுக்கும் ஸ்வரூபலாமாய் எம்பெருமானுக்கும் ஒருவாறு ஸந்தோஷதரமாயிருக்கையாலே ஆழ்வார்கள் அதனை ஒரு பொருளாக எடுத்துக் கூறுவர்கள். மேகலை-நெவநா என்ற வடசொல் திரிபு.

English Translation

The Lord of great fame holds a coiled conch. A great booming sound issued from it, which destroyed the rebellious kauravas. The three gods halled it saying, the word's misery has ended. If he does not desire my jewelled belt, we have nothing to lose

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்