விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கிளர் ஒளியால் குறைவு இல்லா*  அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,* 
    கிளர் ஒளிய இரணியனது*  அகல் மார்பம் கிழித்து உகந்த,* 
    வளர் ஒளிய கனல் ஆழி*  வலம்புரியன் மணி நீல,* 
    வளர் ஒளியான் கவராத*  வரி வளையால் குறைவு இலமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கிளர்ஒளியால் குறைவு இல்லா - கிளர்கின்ற தேஜஸ்ஸூ நிரம்பப் பெற்ற
அரி உரு ஆய் - நரசிங்கமூர்த்தியாய்
கிளர்ந்து எழுந்து - சீறிக்கொண்டு தோன்றி,
கிளர் ஒளிய இரணியனது - மிக்கதேக பொருந்திய இரணியனுடைய
அகல் மார்பம் - விசாலமான மார்பை

விளக்க உரை

(கிளரொளியால்.) ஆச்ரிதவிரோதியான இரணியனைப் பிளந்தொழிந்த நரஸிம்ஹன் விரும்பாத வளை எனக்கு வேண்டாவென்கிறாள்.-கிளர்ந்த வொளி குறைவின்றிக்கேயிருக்கிற நரஸிம்ஹமூர்த்தியாய்ச் சீறிக்கொண்டு தோற்றி இரணியனுடைய அகன்ற மார்வைக்கிழித்து ‘சிறுக்கனுடைய விரோதி தொலையப் பெற்றோம்’ என்று திருவுள்ள மூவந்தவன். வளரொளிய கனலாழி வலம்புரியன்-இரணியனது உடல் நலஸிம்ஹனுடைய திருநகருங்களுக்கே இரைபோரப் பெறாமையாலே திவ்யாயுதங்களுக்கு இங்குக் காரியமேயில்லையாயிற்று: ‘இங்கு நமக்கு ஒன்றும் இரைகிடைக்கவில்லையே!’ என்கிற சீற்றத்தினால் சங்கும் சக்கரமும் வயிறெரிகிறபடி. அப்படிப்பட்ட எம்பெருமான் விரும்பாத-(அதாவது) அவன் வாங்கித் தன் கையில் இட்டுக்கொள்ளாத வளை எனக்கு வேண்டா என்றாளாயிற்று.

English Translation

He burst forth as a fierce lion-form exuding immense power, and tore apart the radiant wide chest of Hiranaya with relish, He bears the resplendent discus and conch. If he does not desire my jewelled bangles, we have nothing to lose

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்