விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அறிவினால் குறைவு இல்லா*  அகல் ஞாலத்தவர் அறிய,* 
    நெறி எல்லாம் எடுத்து உரைத்த*  நிறை ஞானத்து ஒருமூர்த்தி,* 
    குறிய மாண் உரு ஆகி*  கொடுங் கோளால் நிலம் கொண்ட,* 
    கிறி அம்மான் கவராத*  கிளர் ஒளியால் குறைவு இலமே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அறிவினால் குறைவு இல்லா - ‘நமக்கு அறிவு இல்லையே!’ என்ற குறைபடமாட்டாத
அகல் ஞாலத்தவர் அறிய - விரிவான நிலவுலகிலுள்ளாரனைவரும் அறியும்படியாக
நெறி எல்லாம் - (கருமயோகம் முதலிய) ஸகலோபாயங்களையும்
எடுத்து உரைத்த - ஸாரமாகவெடுத்தருளிச்செய்த
நிறை ஞானம் - பரிபூர்ண ஞானத்தையுடைய

விளக்க உரை

(அறிவினால் குறைவில்லா) தன்னைப்பெறுதற்கு உபாயமானவற்றையெல்லாம் தானே அருளிச்செய்து, ஹிதோபதேசத்திற்குப் பாங்கல்லாதவர்களைத் தன் அழகாலே வசப்படுத்திக் கொள்பவனான பெருமான் விரும்பாத லாவண்யம் எனக்கு எதற்காக? என்கிறாள். “அறிவினால் குறைவில்லா அகல்ஞாலத்தவர்” என்பதற்கு அறிவினால் பரிபூர்ணர்களான இவ்வுலகத்தவர்கள்’ என்று பொருளன்று. ‘நமக்கு அறிவு இல்லையே!’ என்று குறைபட அறியாதவர்கள் என்றபடி. ‘நமக்குச் சோறில்லையே, தண்ணீரில்லையே, துணிமணியில்லையே!’ என்று குறைபடுவர்கள்; அறிவு இல்லையே’ என்றுமாத்திரம் குறைவுபடுவதில்லை ஸம்ஸாரிகள். இங்கே நம்பிள்ளையீடு;-“நாட்டார் அந்ந பாநாதிகறெல்லாவற்றாலும் கார்யமுடையராயருப்பார்களிறே; அறிவொன்றிலுமாயிற்று குறைவுபடவறியாதது. அறிவால் கார்யமின்றிக்கேயிருப்பாராயிற்று. பகவத்கீதை அர்ஜூநனை நோக்கி அவதரித்ததாயினும், அவனை ஒரு வியாஜமாக நிறுத்தி அஸ்மதாதிகளுக்குமாக அது அருளிச் செய்யப்பட்டதாகையாலே “அகல்ஞாலத்தவரறிய நெறியெல்லாமெடுத்துரைத்த” என்றார். கர்மஜ்ஞான பக்திப்ரபத்திகளும், அவதாராஹஸ்யஜ்ஞானம், புருஷோததமவித்யை முதலானவைகளுமான உபாயங்களெல்லாவற்றையும் திருவுள்ளம்பற்றி “நெறியெல்லாம்” என்கிறார்.

English Translation

So that thinking men in the wide world may know, the Lord, -a great figure of knowledge, -expounded the paths of truth. He apeared as a clever manikin and took the Earth in three strides, if he does not desire my youthfulness, we hav nothing to lose

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்