விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏறு ஆளும் இறையோனும்*  திசைமுகனும் திருமகளும்,* 
    கூறு ஆளும் தனி உடம்பன்*  குலம் குலமா அசுரர்களை,* 
    நீறு ஆகும்படியாக*  நிருமித்து படை தொட்ட,* 
    மாறாளன் கவராத*  மணி மாமை குறைவு இலமே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏறு ஆளும் இறையோனும் - விருஷபவாஹனனான சிவபிரானும்
திசைமுகனும் -நான்முகனும்
திருமகளும்- பெரியபிராட்டியாரும்
கூறு ஆளும் - ‘இன்னஇடம் இன்னாருடையது’ என்று பங்கிட்டுக் கொண்டு வஸிக்கப்பெற்ற
தனி உடம்பன்-   விலக்ஷ்ணமான திருமேனியையுடையவனும்,

விளக்க உரை

ஏறாளுமிறையோனும்) ஸௌசீல்யமே வடிவெடுத்த எம்பெருமான் விரும்பாத அழகிற நிறம் எனக்கு ஏதுக்கு? என்கிறாள். ஆரம்பிக்கும்போதே “ஏறாளுமிறையோன் கூறாளாந் தனியுடம்பன்” என்றது ஒரு தாமஸ தெய்வத்துக்கு எளிதான திருமேனி எனக்கு அரிவாதே! என்ற வருத்தத்தைக் காட்டுமென்க. “வேதாத்மா விஹகேச்வர:” என்கிறபடியே வேதஸ்வரூபியான பக்ஷிராஜனை வாஹநமாகக்கொண்ட எம்பெருமான்முன்னே மூடஜந்துவானவொரு எருதை வாஹநமாகக்கொண்டு திரிகின்ற உருத்திரனும், நான்முகனும், ஸ்ரீ மஹாலக்ஷ்;மியும் ஆகிய இவர்கள் கூறிட்டு ஆளும்படி அத்விதீயமான திருமேனி படைத்த பெருமான் என்றது-அவனுடைய ஸௌசீல்யமென்னும் மஹாகுணத்தை யநுபவித்துப் பேசினபடி. “சிவனொடு பிரமன் வண்திருமடந்தை சேர்திருவாகம் எம்மாவியீரும்” என்கிறார் மேல் ஒன்பதாம்பத்திலும். அங்கு உரைத்ததெல்லாம் இங்கும் அறியத்தக்கது. குலங்குமா அசுரர்களை நீறாகும்படியாக நிருமித்துப் படைதொட்ட = சீலகுணம் சொல்லிற்றுகீழ்; வீர்யகுணம் சொல்லுகிறது இதனால். தான் நினைத்தால் விரோதிவர்க்கங்களைக் கிழங்கறக்களைந்து தொலைப்பதில் ஓர் அருமயுண்டோ? சக்தியுக்தன் உபேக்ஷித்தால் உயிர்தரிக்க வழியுண்டோவென்கை.

English Translation

The offensive well-armed Lord has it all arranged, to destroy the clannish Asuras by the score. The bull-rider Siva, the four-faced Brahma and the lotus-dame Lakshmi reign on his peerless frame. If he does not desire my spotless beauty, we have nothing to lose

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்