விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்டுகொண்டு என் கைகள் ஆர*  நின் திருப்பாதங்கள்மேல்,* 
    எண் திசையும் உள்ள பூக்கொண்டு*  ஏத்தி உகந்து உகந்து,* 
    தொண்டரோங்கள் பாடி ஆட*  சூழ் கடல் ஞாலத்துள்ளே,* 
    வண் துழாயின் கண்ணி வேந்தே!*  வந்திடகில்லாயே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வண் துழாயின் கண்ணிவேந்தே! - அழகிய திருத்துழாய்மாலையையுடைய நாயனே!
கண்டுகொண்டு - (நெஞ்சினால் காண்கையன்றிக்கே) கண்ணாரக் கண்டு
என் கைகள் ஆர - எனது கைகள் ஆவல் தீரும்படி
நின் திருபாதங்கள் மேல் - உனது திருவடிகளின் மீது
எண் திசையும் உள்ள பூ கொண்டு - எங்குமுள்ள புஷ்பங்களை சேகரித்துக்கொண்டு

விளக்க உரை

பெற்ற உபகாரங்களைப் பேசினார் கீழ்ப்பாட்டில்; இனிப் பெறவேண்டுமது தன்னைப் பேசுகிறார் இப்பாட்டில். இந்த ஸம்ஸார நிலந்தன்னிலேயே உன்னைக்கண்டு அடியோங்கள் எல்லாவடிமைகளுஞ் செய்து உஜ்ஜீவிக்கும்படி அருள்புரியவேண்டு மத்தனையே அபேக்ஷ்தமென்கிறார். காணப்பெறாமல் பட்டினி கிடக்கின்ற கண்கள் பட்டினி தீரும்படி காணவேணும். கைகளின் விடாய்தீர உன் திருவடிகளிலே எண்டிசையுமுள்ள பூக்களையுங் கொண்டு துர்வ வேணும்; அத்தாலே உன்னுடைய திருவுள்ளம் உகக்க, அவ்வுகப்புக்கண்டு அடியோங்கள் உகந்து, அவ்வுகப்புக்குப் போக்குவீடாகப் பாடவும் ஆடவும் வேணும். இப்பரிமாற்றங்களுக் கெல்லாம் ஏகாந்தமாகத் திருநாட்டிலே கொண்டுபோகிறனென்னவொண்ணாது; இப்பேறு கடல் சூழ்ஞாலத்துள்ளே யாகவேணும். அங்கு நித்ய ஸூரிகளுக்கு ஸேவைஸாதிக்கிறபடியே *தோளிணைமேலும் நன்மார்பின் மேலும் சுடர்முடி மேலும் தாளிணைமேலும் புனைந்த தண்ணந் துழாய் மாலையோடே வந்து காட்சி தந்தருளவேணும்; இப்படி எத்தனைநாள் பிரார்த்தித்த விடத்திலும் வந்தருள்கின்றிலையே; நான் பெறாதது இத்தனையே யென்றாராயிற்று.

English Translation

When I see you I shall pour flowers on your feet with glee, brought from the eight Quarters, praise and praise again. And all we devotees will sing and dance in joy. O Lord of Tulasi garland, will you nor come down to this Earth?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்