விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இவளைப் பெறும்பரிசு*  இவ் அணங்கு ஆடுதல் அன்று அந்தோ,* 
    குவளைத் தடங் கண்ணும்*  கோவைச் செவ்வாயும் பயந்தனள்,* 
    கவளக் கடாக் களிறு அட்ட பிரான்*  திருநாமத்தால்,* 
    தவளப் பொடிக்கொண்டு*  நீர்இட்டிடுமின் தணியுமே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கடா - மதம் பெற்றதான
களிறு - (குவலயாபீடமென்னும்) யானையை
அட்ட - தொலைத்தருளின
பிரான் - ஸ்வாமியினுடைய
திருநாமத்தால் - திருநாமோச்சாரண பூர்வகமாக

விளக்க உரை

மகளுடைய நோய் தீரவேணுமென்று நீங்கள் பண்ணுகிற பரிஹாரம் நோயை இன்னமும் அதிகப்படுத்தா நின்றதேயன்றித் தீரச்செய்கின்றதில்லையே: ஆனபின்பு இந்த முறைமைகளைவிட்டு நோயின் ஸ்வரூபத்திற்கு யோக்யமான பரிஹாரமுறைமை அனுஷ் டிக்கப் பாருங்களென்கிறாள். இந்த நல்லசரக்கை இழவாமல் பெறவேண்டியிருந்தீர்களாகில் இப்படி விபரிதமான செயல்களைச் செய்வீர்களோ? பெறுவதற்கு ஹேதுவென்று நினைத்து நீங்கள் செய்கிற காரியம் இழத்தற்கன்றோ ஹேதுவாகின்றது. வேலனைக்கொண்டு வெறியாடுவிக்கின்றவிது இவளைப் பெறுவதற்கு ஹேதுவாகுமோ ? இவளது உயிர் மாய்வதற்கன்றோ இது ஹேது!. அநியாயமாய்; இப்பெண்பிள்ளையை இழந்துவிடப் பார்க்கின்றீர்களே! அந்தோ! இப்படியும் ஒரு காரியம் செய்யலாமோ! என்கிற நிர்வேதம் முதலடியாக வடிவெடுத்திருக்கின்றது.

English Translation

This frenzied dancing in no way to get her back, alas! Her large lotus eyes and coral lips whiten in fear. Chart the names of the Lord who killed the rutted elephant, and smear white mud on her forehead; her fever will subside

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்