விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இது காண்மின் அன்னைமீர்!*  இக் கட்டுவிச்சி சொல் கொண்டு,*  நீர் 
    எதுவானும் செய்து*  அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்,* 
    மது வார் துழாய்முடி*  மாயப் பிரான் கழல் வாழ்த்தினால்,* 
    அதுவே இவள் உற்ற நோய்க்கும்*  அரு மருந்து ஆகுமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்னை மீர் - தாய்மார்களே!
இதுகாண்மின் - நான் சொல்லுகிற இக்காரியத்தைச் செய்துபாருங்கள்;
நீர் - நீங்கள்
இ கட்டுவிச்சி சொல்கொண்டு - இந்தக் குறத்தியின் பேச்சைக் கேட்டு
எதுவானாலும் செய்து - ஸ்வரூப விருத்தமானதைச் செய்து

விளக்க உரை

தவறுதலான செயல்களைச் செய்யாமல் எம்பெருமான் திருவடிகளை வாழ்த்துவதாகிற பரிஹாரமுறைமையை யனுட்டித்தால் இவளுடைய நோய் தீருமென்கிறாள். நான் சொல்லுகிறவார்த்தை விரைவில் பயன்தருகின்றதா இல்லையா என்பதை நீங்கள் கைமேலே காணுங்கோளென்பாள் இது காண்மினன்னைமீர் என்கிறாள். காண்மின் என்றது ‘கேண்மின’ என்ற பொருளில் வந்ததாகவும் கொள்ள இடமுண்டு. அன்னைமீர்! என்கையாலே நீங்கள் மிகவும் மூத்தவர்களேயானாலும், சொல்லுகிற நான் சிறுமியேயானாலும் சொல்லும்பேச்சு நல்லதாயிருக்குமாகில் ஆதரிக்கவேண்டாவோ? என்கிற கருத்துத்தொனிக்கும். “வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருகவென்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே” என்கிறபடியே என்போல்வாருடைய பேச்சுக்கு உபசார விசேஷங்கள் செய்யவேண்டியிருக்க, அவை செய்யாவிடினும் காது கொடுத்துக் கேட்கத்தானாகாதோ என்கிற கருத்தும் தொனிக்கும். கட்டுவிச்சி-குறி சொல்லுகிறவள். இகரச்சுட்டு-அவளுடைய இழிவைப் புலப்படுத்தும். “காணிலு முருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார்இ பேணிலும் வரந்தர மடுக்கில்லாத தேவர்” என்கிறபடியே மிகவும் நீசமான தெய்வத்தை வழிபடுகின்ற இவளை எங்கே தேடிப்பிடித்தீர்கள்! என்று க்ஷேபிக்கிறபடி. கண்கொண்டு காணவொண்ணாத விவளை அழைத்து எதிரேயிருத்தினதுமல்லாமல் இவளுடைய கடியகொடிய பேச்சுகளுக்குக் காது கொடுப்பதுஞ் செய்தீர்களே! என்று இடித்துக்கூறுகிறபடி. இகரச்சுட்டு சொல்லில் அந்வயிக்கவுமாம்; கட்டுவிச்சயின் இச்சொல் என்க.

English Translation

Look here, Ladies! Do not go and do wild things throwing flesh and toddy. pay no heed to this wierd gypsy's worlds of advice. praise the Lord who wears the Tulasi crown. That alone will cure this girl's malaise

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்