விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தீர்ப்பாரை யாம் இனி*  எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்,*
    ஓர்ப்பால் இவ் ஒள் நுதல்*  உற்ற நல் நோய் இது தேறினோம்,* 
    போர்ப்பாகு தான் செய்து*  அன்று ஐவரை வெல்வித்த,*  மாயப்போர்த் 
    தேர்ப்பாகனார்க்கு*  இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓர்ப்பால் - நன்கு நிரூபிக்குமளவில்
இ ஓள் நுதல் - அழகிய நெற்றியையுடைய இப்பெண்பிள்ளை
உற்ற இது - அடைந்திருக்கின்ற இந்த நோயானது
நல் நோய் - விலக்ஷ்ணமான நோயாகும் ;
தேறினோம் - திண்ணமாக அறிந்தோம் ;

விளக்க உரை

பராங்குசநாயகியன் தோழியானவள், ‘இந்நோய் பாண்டவபக்ஷ்பாதியான கண்ணபிரானடியாக வந்ததாகையாலே இதற்கு நீங்கள் பரிஹாரமாக நினைத்துச் செய்கிறவை பரிஹாரமல்ல’ என்று க்ஷேபிக்கிறாள். அன்னைமீர்! யாம் இனித்தீர்ப்பாரை எங்ஙனம் நாடுதும்? = இச்சொல்தொடர் பலவகைக் கருத்துக்களைக் கொண்டது; இவ்வாழ்வாருடைய அருகிலே வருமவர்களெல்லாம் இவரோடொப்ப மோஹிப்பவர்களேயன்றி, உணர்ந்திருந்து பரிஹாரமுறைமைகளை ஆராயவல்லார் ஒருவருமில்லையே! என்கை. நோய்க்குப் பரிஹாரம் பண்ணிக்கொண்டிருக்குமவர்களை நோக்கித் “தீர்ப்பாரையாமிளி யெங்ஙனம் நாடுதும்” என் கையாலே நீங்கள் செய்கிறவை பரிஹாரமல்ல என்றவாறுமாம். “கடல்வண்ணாரிது செய்து காப்பாராரே?” என்கிறபடியே * நோய்களறுக்கும் மருந்தான எம்பெருமாள் தானே இங்ஙனே நோய்செய்தானான பின்பு இனி இந்நோயைத் தீர்க்க வழியுண்டோ? என்றபடியுமாம். ஓர்ப்பால்-இப்போது ஆராய்;ந்து பார்த்தவிடத்தில் என்றபடி. ஓர்ப்பு-ஆராய்ச்சி. அகத்தினழகு முகத்திலே தெரியும்” என்பர்களே “உலகர்கள்: இவளுடைய திருமுகமண்டலத்தில் தெளிவை நோக்கும்போதே இவளுடைய நோய்க்கு நிதாநம் தெரியவில்லையோ என்கை. இங்கே ஈடு:-“அம்புபட்ட வாட்டத்தோடே முடிந்தா

English Translation

Ladies! We have examined well this bright-forehead girl, and diagnosed her good malaise; her heart yearns for the charioteer, who commanded the army in fierce battle, and secured victory for the five pandavas. How now can we seek a healer?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்