விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும்*  கிடந்தும் நின்றும்,* 
    கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும்*  மணம் கூடியும்,* 
    கண்ட ஆற்றால் தனதே*  உலகு என நின்றான் தன்னை,* 
    வண் தமிழ் நூற்க நோற்றேன்*  அடியார்க்கு இன்ப மாரியே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உமிழ்ந்தும் - பிறகு வெளி நாடுகாண உமிழ்ந்தும்
கடந்தும் - (மற்றொருகால்) அளந்து காற்கீழேயிட்டும்
இடந்தும் - (அவாந்தர ப்ரளப்த்திலே வராஹ ரூபியாய்) இடந்தெடுத்தும்
கிடந்தும்; - (ஸ்ரீராமாவதாரத்திலே) கடற்கரையிலே கிடந்தும்
நின்றும் - இராவணவதத்தின் பிறகு தேவர்கட்குக் காட்சி கொடுத்துநின்றும்

விளக்க உரை

தாம் பாடுகிற கவிகளின் இனிமையைத் தாம் அநுஸந்தித்து, எம்பெருமானுக்கு நல்லராயிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவற்றைக் கேட்டால் எங்ஙனே இனியராகிறாரோ வென்கிறார். எம்பெருமானுடைய சேடிதங்களடங்க என் சொல்லுக்குள்ளேயாம்படி கவிபாட வல்லேனாய் ப்ராப்த விஷயத்திலே வாசிகமாக அடிமை செய்யப்பெற்றது மாத்திரமன்றிக்கே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆனந்தமளிக்கவல்லவனானே னென்கிறார். எம்பெருமானுடைய சேஷ்டிதங்கள் பலவற்றையும் முன்னடிகளில் கங்காப்ரவாஹம்போல் அருளிச்செய்கிறார். உண்டது பிரளயாபத்தில், உமிழ்ந்தது பிரளயம் நீங்கினவாறே: கடந்தது வாமநரவதாரத்தில், இடந்தது வராஹவதாரத்தில், கிடந்தது கடற்கரையிலே: ஸேதுபந்தனத்திற்கு முன்னே ஸமுத்ரராஜனைநோக்கி அஞ்ஜலி பண்ணிக்கிடந்தகிடை நின்றது-ராவண ஸம்ஹாரம் ஆனபிறகு தேவர்களுக்குக் காட்சி கொடுத்து நின்றது. கொண்டகோலத்தொடு வீற்றிருந்தது-ஜடா வல்கலதாரியாய்ப் பர்ணசாலைகளிலே இருந்த இருப்பாதல்: மகுடாபிஷேகஞ் செய்துகொண்டு பதினோராயிரமாண்டு இருந்த இருப்பாதல்.

English Translation

He swallowed and brought out, measured and lifted the Universe, standing apart and enjoying his beautiful creation. He lies, stands, and sits over it in full majesty, I have sung his praise through songs which are like ambrosia to devotees

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்