விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும்*  இன்பனை,*  ஞாலத்தார்- 
    தமக்கும்*  வானத்தவர்க்கும் பெருமானை,*  தண் தாமரை- 
    சுமக்கும்*  பாதப் பெருமானை*  சொல்மாலைகள் சொல்லுமாறு- 
    அமைக்க வல்லேற்கு*  இனி யாவர் நிகர் அகல் வானத்தே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பூவின் மிசை நங்கைக்கும் - தாமரை மலரில் வசிக்கும் பெரிய பிராட்டியாருக்கும்
இன்பனை - இன்பமளிப்பவனும்
ஞாலத்தார் தமக்கும் - லீலாவிபூதியிலுள்ளார்க்கும்
வானத்தவர்க்கும் - பரமபத வாசிகளுக்கும்
பெருமானை - தலைவனும்

விளக்க உரை

ஆழ்வார் தம்பக்கலிலே எம்பெருமானுக்குண்டான அபிநிவேஸத்தைக் கண்டு, இப்படிப்பட்ட எம்பெருமானைக் கவிபாட வல்ல எனக்குப் பரமபதத்தில் ஸூரிகளும் நிகரல்லர் என்கிறார். பெரிய பிராட்டியாரிடத்திலும், அவளுடைய பரிகரமான நம்மிடத்திலும் ஸ்நேஹித்திருப்பவன் எம்பெருமான் என்று இந்தமுறையிலே யிட்டுப் பாசுரமருளிச்செய்ய வேண்டியிருக்க, “நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும்” என்று தம்மை முந்துறச் சொல்லிப் பிறகு பிராட்டியைச்; சொல்லியிருப்பது கொண்டு ஒரு விசேஷார்த்தம் சிக்ஷ்க்கப்படும். (ஆசார்ய ஹ்ருதயத்தில் இரண்டாம் பிரகரணத்தில்-“இன்பு மன்பும் முற்படுவது கொழுந்துவிடுதாகிறது.” இத்யாதி சூர்ணிகை இங்கே அநுஸந்தேயம்.) எம்பெருமான் ப்ரீதிபண்ணுமிடத்தில் நித்யாநபாயிநியான பிராட்டியிற்காட்டிலும் அதிகமாகவே நம்மிடத்தில் பண்ணுவனென்னுமிடம் இதனால் அறியத்தக்கது. இங்கே ஈட்டு ஸ்ரீ ஸூக்திகாண்மின்;-“இனபனா மிடத்தில்; முற்பாடு இங்கேயாய்ப் பின்பாயிற்று அவளுக்கு ஸ்நேஹித்திருப்பது” என்று. இவ்வர்த்தம் ஸ்ரீராமாயணத்தில் ஒரு ஸந்தர்ப்ப விசேஷத்தில் பெருமாளாலேயே வெளிடப்பட்டது; எங்ஙனே யென்னில், பெருமாள் எழுந்தருளி நிற்கச்செய்தே இராவணன் கோபுர சிகரத்திலேவந்து தோன்றினவாறே ‘ராஜ த்ரோஹியான பயல் இங்ஙனம் கூச்சமன்றித் திருமுன்பே நிற்பதும் நீதியோ’ என்று சீற்ற முற்ற ஸூக்ரிவமஹாராஜர். அவன் மேலே எழப்பாய்ந்து மீண்டு வந்தபோது பெருமாள் *** த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீதயா மம?” என்றார்; ‘உனக்கு ஓர் அனர்த்தம் விளையுமாகில் பின்னை ஸீதாபிராட்டிதான் எனக்குக்கிடைத்தன? என்பது இதன் பொருள். இதனால்இ பிராட்டி பக்கலிற்காட்டிலும் அடியவர் திறத்தில் எம்பெருமானுக்குள்ள அன்பின் கனம் அறியவெளிதாம்.

English Translation

Lord of earthlings and celestials, he is sweet to the lotus-lady Lakshmi and to us alike. His feet are borne on a lotus; I have sung his praise with poems, now who in the wide world can equal me?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்