விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வல்வினை தீர்க்கும் கண்ணனை* வண் குருகூர்ச் சடகோபன்,* 
    சொல் வினையால் சொன்ன பாடல்*  ஆயிரத்துள் இவை பத்தும்,*
    நல் வினை என்று கற்பார்கள்*  நலனிடை வைகுந்தம் நண்ணி,*
    தொல்வினை தர எல்லாரும்*  தொழுது எழ வீற்றிருப்பாரே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வல்வினை - ஸகல பாபங்களையும்
தீர்க்கும் கண்ணனை - போக்குமியல்வினனான க்ருஷ்ணனை
வண் குருகூர் சடகோபன் - வளப்பமுடைய திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்
சொல் வினையால் - சொல்லுந் தொழில் வன்மையால்
சொன்ன பாடல் - அருளிச் செய்த பாட்டுக்கள்

விளக்க உரை

இத்திருவாய்மொழி கற்பவர்கள் எல்லாத்துன்பங்களும் தொலையப்பெற்றுத் திருநாட்டிலே நித்யஸூரிகள் ஆதரிக்கும்படியான பெருமைபெற்று மகிழ்வரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். கீழ்ப்பாட்டிற் கூறியபடி ஆழ்வார்க்கு ஆற்றாமை மீதூர்ந்தாவறே இனி யிவரை இங்ஙனே துடிக்கவிட வொண்ணாதென்று திருவுள்ளம் பற்றிய எம்பெருமான் பதறி ஓடிவந்து ஸேவை ஸாதித்து இவருடைய துயரங்களைப் போக்கியருளினானென்பது விளங்க வல்வினை தீர்க்குங் கண்ணனை யென்கிறார். இங்கு நம்பிள்ளை யீட்டில்-“பெற்றவர்கள் கைவிட்டால் பிடித்தவர்கள் கைவிடார்களே’ என்றுள்ள ஸ்ரீஸூக்தி மிகவும் ரஸிக்கத்தக்கது. கீழ்ப்பாட்டில் “மயற்பெருங்காதலென் பேதைக்கு என் செய்கேன் வல்வினையேனே” என்று தாய் சொல்லித் தலைக்கட்டுகையாலே பெற்றவர்கள் கைவிட்டமை விளங்கிற்று. உடனே “வல்வினை தீர்க்குங் கண்ணனை” என்கையாலே பிடித்தவர்கள் கைவிட்டிலாமை விளங்கிற்று. பிடித்தவர்கள் என்றது-பரகத ஸ்வீகாரமாகப்பற்றின எம்பெருமான என்றபடி.

English Translation

This decad of the thousand songs by Kurugur satakopan is addressed to benevolent Krishna. Those who learn it as good words will end misery, enter Vaikunta, and reign worshipped by all

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்