விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மண்ணை இருந்து துழாவி*  'வாமனன் மண் இது' என்னும்,* 
    விண்ணைத் தொழுது அவன் மேவு*  வைகுந்தம் என்று கை காட்டும்,* 
    கண்ணை உள்நீர் மல்க நின்று*  'கடல்வண்ணன்' என்னும் அன்னே!*  என் 
    பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு*  என் செய்கேன் பெய் வளையீரே? (2)      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெய் வளையீர் கையில் வளையணிந்த மாதர்காள்!
மண்ணை இருந்து துழாவி (என் மகளானவள்) பூமியைத் துழாவி
இது வாமனன் மண் என்னும் இது (எம்பெருமான்) வாமனனாய் அளந்து கொண்ட மண்’ என்று கூறுகின்றாள்:
விண்ணை தொழுது -ஆகாசத்தை (நோக்கி) அஞ்சலி பண்ணி
அவன் மேவு வைகுந்தம் என்று ‘அவ்வெம்பெருமான் நித்யவாஸம் பண்ணுகிற ஸ்ரீ வைகுண்டம்’ என்று சொல்லி

விளக்க உரை

என் பெண்ணை பெரு மயல் செய்தார்க்கு -என்னுடைய மகளை இப்படி அதிசயமான பிச்சேறும்படி பண்ணினவருக்கு என் செய்தேன் -யாது செய்வேன்? -பராங்குச நாயகியின் திருத்தாயார் மகளுடைய செய்தியை வினவ வந்தவர்களுக்கு அறிவியா நின்றுகொண்டு ‘இப்படி யிவளை எம்பெருமான் பிச்சேற்றினானே! இதற்கு நான் என் செய்வேனென்கிறாள். ‘பண்டு எம்பெருமான் இவ்வுலகத்தை அளந்தருளினபோது அவன் திருவடிகளோடே ஸம்பந்தம் பெற்றது இந்த மண்’ என்று சொல்லி ஆழ்வார் போதுபோக்குகிறபடியை முதலடி தெரிவிக்கும். உலகத்தில் எல்லாரும் மண்ணை மண்ணாகவே நினைத்துக்கிடப்பர்கள்; ஆழ்வார் அங்ஙனன்றிக்கே அதுதன்னிலே ஒரு விசேஷ ப்ரதிபத்தி பண்ணுகிறபடி. விச்வாமிதரமுனிவன் யாகரக்ஷணர்த்தமாக ஸ்ரீராம லக்ஷ்மணர்களை அழைத்துச் செல்லாநிற்கையில், பெருமாள் ஒரு சோலையைக்கண்டு ‘இதுஎன்ன’ என்றுகேட்க, முனிவன் *** “அயம் ஸித்தாச்ரமேச நாம” என்று தொடங்கிச் சொல்லி வந்து” *** மயா து பக்த்யா தஸ்யைவவாமநஸ்யோப புஜ்யதே.” என்றான்; இது முன்பு ஸித்தாச்ரமமாய் ஸ்ரீவாமநமூர்த்தி எழுந்ததருளி யிருந்த தேசமாயிற்று; அப்பெருமான் இவ்விடத்தைவிட்டு அகன்ற பின்பு அவன் பக்கல் பக்தியாலே விடமாட்டாமல் அம்மண்ணை மோந்து கொண்டு கிடக்கின்றேன்-என்பது விச்வாமித்ரன் சொன்ன வார்த்தையின் கருத்து. அபிநிவேசமுடையார்படி இதுவாயிற்று.

English Translation

O Bangled Ladies, what can I do the Lord who made my daughter love-sick. She caresses the Earth and says, This is Vamana's Earth!" She points to the sky and says, "That is his Vaikunta". Her heart's grief overflows from her eyes; "Ocean-hued Lord!", She sighs

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்