விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா,* 
    எண் இல் பல்கலன்களும்*  ஏலும் ஆடையும் அஃதே,*
    நண்ணி மூவுலகும்*  நவிற்றும் கீர்த்தியும் அஃதே,* 
    கண்ணன் எம் பிரான் எம்மான்*  கால சக்கரத்தானுக்கே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

காலம் சக்கரத்தான் - காலத்தை நடத்துகிற திரு வாழியையுடையனாய்
எம்மான் - எனக்கு ஸ்வாமியாய்
எம் பிரான் - எனக்கு மஹோபநாரகனான
கண்ணனுக்கு - ஸ்ரீ க்ருஷ்ணபகவானுக்கு
எனது உயிர் - என் ஆத்மவஸ்து

விளக்க உரை

தம்முடைய உயிரையும் காதலையும் எம்பெருமான் போரப்பொலிய அபிமானித்தபடியைப் பேசுகிறார். எனது உயிர் கண்ணி-என்னுடையதாக அபிமானித்திருக்கிற உயிரை எம்பெருமான் தனக்கு மாலையாகக் கொண்டானென்கை. இங்கே ஈடு-“மார்வத்து மாலை என்கின்றவளைத் தனக்கு மாலையாகக்கொள்ளுகை ப்ராப்தம்: அதொழிய என்ஸத்தையைக்கிடீர் தனக்கு மாலையாகக்கொள்ளுகிறது” என்பதாம். மாலையணிந்து கொண்டால் என்ன ஆனந்தமுண்டாகுமோ அந்த ஆனந்தம் என்ஸத்தையினால் எம்பெருமானுக்கு உண்டாகிறது என்றபடி. கனகச்சோதி முடிமுதலா எண்ணில் பல் கலன்களும் எனது காதல் ஸூவர்ணமயமாய் ஒளிமிக்க கிரிடம் முதலாகிய எண்ணிறந்த பல திருவாபரணங்களும் என்னுடைய காதல் என்றபடி. அதாவது இவருடைய காதலுக்குத் தான் இலக்காகப் பெற்றதுண்டே அது தன்னையே தனக்குப் பல திருவாபரணங்கள் சாத்தினதாக அவன் திருவுள்ளம்பற்றியிருக்கிறபடி.

English Translation

For Krishna, my Lord, who bears the wheel of time, my life is the perfect garland, my love his radiant crown. His countless jewels and his vestments are also my love. Even the praise the three worlds sing is my love

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்