விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கோவை வாயாள் பொருட்டு*  ஏற்றின் எருத்தம் இறுத்தாய்,*  மதிள் இலங்கைக் 
    கோவை வீயச் சிலை குனித்தாய்!*  குல நல் யானை மருப்பு ஒசித்தாய்,* 
    பூவை வீயா நீர் தூவிப்*  போதால் வணங்கேனேலும்,*  நின் 
    பூவை வீயாம் மேனிக்குப்*  பூசும் சாந்து என் நெஞ்சமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கோவை வாயான் பொருட்டு - கோவைக்கனிபோற் சிவந்த அதரத்தையுடையவளான நப்பின்னைப் பிராட்டி நிமித்தமாக
ஏற்றின்-  எருதுகளினுடைய
எருத்தம் - பிடரியை
இறுத்தாய் - முறித்தவனே!
மதிள்- மதிள் சூழ்ந்த

விளக்க உரை

நப்பின்னைப் பிராட்டி நிமித்தமாக எருதுகளை அடர்க்கும்போதும், ஸீதாபிராட்டி நிமித்தமாக இராவணனை யழிக்கும் போதும் அந்தந்த ஸமங்களிலுண்டான சிரமம் தீரும்படி அடியேன் அவ்வப்போதுகளில் ஸந்நிஹிதனாயிருந்த உபசாரங்கள் செய்யப் பெற்றிலேன்! அப்படியிருந்தும் என்னுடைய ஹ்ருதயத்தையே உனக்குப் பரம போக்யமாகக் கொண்ட விதம் என்னே! என்று ஈடுபடுகிறார். அந்தந்த ஸமயங்களில் சிசிரோபசாரம் பண்ணப்பெறாத குறைதீர இப்போது என்னெஞ்சுதானே உனக்கு சிசிரோபசாரமாக நின்றது என்கை பரமதாத்பர்யம். கோவைவாயாள்பொருட்டு ‘பின்னைபொருட்டு’ என்னாமல் இங்ஙனே சொன்னது, அவளுடைய வாயழகைக் கண்ட கண்ணபிரான், தன்னைப் பேணாமலும் எருதுகளின் செருக்கைக்கணிசியாமலும், ‘அருந்தொழில் செய்தாகிலும் இவளை நாம் பெற்றே தீர வேணும்’ என்ற உறுதி கொண்டபடியைக் காட்டுதற்காம். இங்கே ஈட்டு ஸ்ரீ ஸூக்தி காண்மின்; -“ரிஷபங்களேழை முன்னிட்டு ‘இவற்றை அடர்த்தாக்கு இவளைக் கொடுக்கக் கடவோம்’ என்று சொல்லி இவளை அலங்கரித்து முன்னே கொண்டுவந்து நிறுத்தினார்கள்; ‘இவளை அணையலாமாகில் இவற்றை முறித்தாலாகாதோ’ என்று தன்னைப்பேணாதே அவற்றின் மேலே விழுந்தான்.”

English Translation

O Lord! You battled a horde of bulls for coral-lipped Nappinnai, you killed Lank's king with your arrows and the rutted elephant with its tusk, -what thought I have not worshipped you with fragrant flowers and water; my heart is the cool Sandal paste for your flower-like face

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்