விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பா இயல் வேத*  நல் மாலை பல கொண்டு,* 
    தேவர்கள் மா முனிவர்*  இறைஞ்ச நின்ற* 
    சேவடிமேல் அணி*  செம் பொன் துழாய் என்றே 
    கூவுமால்,*  கோள் வினையாட்டியேன் கோதையே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பா இயல் வேதம் - சந்தஸ்ஸூக்கள் பொருந்திய வேதங்களாகிற
நல் பல மாலை கொண்டு - திவ்யமான பல மாலைகளைக் கொண்டு
தேவர்கள் - தேவர்களும்
மா முனிவர் - மஹா முனிகளும்
இறைஞ்ச நின்ற - ஆராதிக்கும்படி (உலகையளந்து) நின்ற

விளக்க உரை

உலகளந்தருளின எம்பெருமான் திருவடிகளில் திருத்துழாயை என் மகள் ஆசைப்படாநின்றாளென்கிறாள். மூலத்தில் “தேவர்கள் மாமுனிவரிறைஞ்சநின்ற சேவடி” என்றிவ்வளவேயுள்ளது: “உலகளந்த திருவடி” என்று வ்யக்தமாக இல்லை; “பாற்கடல் சோந்த பரமனுடைய அழகிய திருவடிகளிலே அணிந்த செம்பொற்றுழாயென்று இவள் கூப்பிடா நிற்குமென்கிறாள்” என்றருளிச்செய்தார் ஆறாயிரப்படியில் பிள்ளான். மற்ற வியாக்கியானங்களில்-“உலகளந்தருளனவன்; திருவடிகளிற் திருத்துழாயை ஆசைப்படாநின்றாளென்கிறாள்” என்றுள்ளது. பா இயல் வேதம்= பா என்று சந்தஸ்ஸூக்களைச் சொல்லுகிறது. காயத்ரி, திரிஷ்டுப், அநுஷ்டுப், ஜகதீ என்றிப்படி பலவகைப்பட்ட சந்தஸ்ஸூக்கள் பர்ஸித்தங்கள். என்று நியதியும் கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சந்தஸ்ஸூக்களிலே வர்த்திப்பதான வேதஸூக்தங்களையும் திவ்யமான மாலைகளையுங்கொண்டு தேவர்களும் ஸநகஸந்தநாதி மஹர்ஷிகளும் ஆராதிக்கும்படி லோகத்தை யளந்துநின்ற செவ்விய திருவடிகளின்மேலே சாத்தப்பட்ட திருத்துழாயையே சொல்லிக் கூப்பிடாநின்றாள்; அதாவது, ‘அந்தப் திருத்துழாய் வேணும், அந்தத்; திருத்துழாய் வேணும், அந்தத்; திருத்துழாய் வேணும்’ என்று அதுவே வாயவெருவதலாக இராநின்றாள், அந்த வஸ்து இப்போது கிடைக்கமாட்டாதது என்பதை அந்தோ! அறிகின்றிலள்-என்றாளாயிற்று.

English Translation

O The heavy pall! My daughter cries for the golden-hued Tulasi garland adorning the lotus feet of the Lord, -whose praise is sung by Vedic seers and celestials

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்