விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆம் இன் சுவை அவை*  ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்தபின்,* 
    தூ மென் மொழி மடவார்*  இரக்கப் பின்னும் துற்றுவார்,* 
    ஈமின் எமக்கு ஒரு துற்று என்று*  இடறுவர் ஆதலின்,* 
    கோமின் துழாய் முடி*  ஆதி அம் சோதி குணங்களே.        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எமக்கு ஒரு துற்று ஈ மின் என்று - ‘எமக்கு ஒரு கவளம் கொடுங்கள்’ என்று சொல்லிக்கொண்டு
இடறுவர் - தடுமாறிச் செல்வர்கள்;
ஆதலின் - ஆதலால்
துழாய் முடி - திருத்துழாயையணிந்த திருமுடியையுடைய
ஆதி அம் சோதி - ஸர்வேச்வரனுடைய

 

விளக்க உரை

தேஹ போஷணத்திற்கு ஹேதுவான அன்னபானம் முதலிய போகமும் அநித்யமாகையாலே ஸகலகாரணபூதனான ஸர்வேச்வரனுடைய திருக்குணங்களை அநுஸந்தியுங்கோளென்கிறார். ஷட்ரஸங்களோடுங்கூடிப் பரமபோக்யமான அடிசிலை வயிறாரவுண்டு தீர்ந்தபின்பும் உடனே இனியமாதர் வந்து ப்ரீதிபாவநை தோற்ற, பின்னையும் உண்ணவேணுமென்று நிர்ப்பந்திக்க, அவர்களுக்காகப் பின்னும் உண்பவர்களாய் இங்ஙனே வயிறு வாழ்ந்தவர்கள் தாங்களே பின்னையொருகாலத்தில் ‘எனக்கு ஒருபிடிசோறு இடுவீர்களா? என்று ஒரு கவளத்திற்கு மன்றாடும்படியாவர்கள்; ஆதலால், திருத்துழாய் மாலையனான எம்பெருமானுடைய திருக்குணங்களை யநுபவித்து நித்ய ஸூபிக்ஷமாயிருக்கப் பாருங்களென்றாராயிற்று. இப்பாசுரத்தின் ஈட்டு ஸ்ரீஸூக்திகள் மிக விநோதம் வாய்ந்தவை; அவை காண்மின்;-“முன்பு இரந்து உண்டு திரிந்தவன் நாழியரிசி பெற்று ஜூவிக்கப் புக்கவாறே ஒரு வெள்ளாட்டியையும் ஸம்பாதித்து ‘முதலியார்!’ என்னவும் பண்ணி ‘அடிசிலுண்ணா நின்றார்’ என்னவும் பண்ணும்: கண்டதடைய இட்டு வயிற்றை நிரப்பி, உதிரங்குடித்து வாய்விட்ட அட்டைபோலே பெயரவும் திரியவும்மாட்டாதே கிடந்து புரளாநிற்குமே; அவ்வளவிலே இவனுக்கு ஸ்நேஹிநிகாளாயிருப்பர் சில ஸ்த்ரீகள் வந்து ‘உடம்பு பதர் போலே யிருந்ததீ! இதுகொண்டு எங்ஙனே ரக்ஷ்யவர்க்கமான வெங்களை நோக்கப்பார்க்கிறது? என்பரகள்; அதுகேட்டு “நாம் உண்டிலோமோ!“ என்ற இவன் தானும் பிரமிக்கும். ஒரு திரளையைத் திரட்டி “இதுவென்? பிடி“ என்பர்கள். பின்னை புஜியாதொழியமாட்டானே. அப்பேச்சின் இனிமையிலே துவக்குண்டு பின்னையும் புஜியாநிற்கும். இவர்களை (இந்த ஸ்திரீகளை) இக்கட்டளையிலே வேறே யொருவன் கைக் கொள்ளுமே; அவர்களையும் முன்புத்தை யிவனைப்போலே இரந்து ஊட்டா நிற்பவர்களே யிவர்கள். அங்கே தன் வயிறு வாழாமல் சென்று ‘நீங்களெல்லாருமாக எனக்கொருபிடி தரவேணும்’ என்னும். பண்டு நல்லது கண்டால் தன் வாயிலிடாதே இவர்களுக்காக்கிப் போந்தவன் (இப்போது) தன் செல்லாமையாலே எனக்கு என்கிருளிறே. அப்போதை யவனுக்கு ப்ரியமாக அவர்கள் முகம் பாரர்களிறே; பின்னையும் தட்டித் திரிவர்கள். ஆனபின்பு ஜீவனத்தின் நிலையாமை இதுவானபின்பு ஸர்வைச்வர்ய ஸூசகமான திருத்துழாய்மாலையைத் திருமுடியிலே உடையனாய் ஜகத்காரண பூதனாய் நிரவதிக தேஜோரூப்மான விக்ரஹத்தை யுடையனாயிந்துள்ளவனுடைய குணங்களைக் கோமின் அனுபவியுங்கள்.”

English Translation

After feasting well on six-taste-meals they who would feast again, -cojoled by sweet-tongued nymphs, -now go begging from house to house for a morsel. Recall the glories of our Tulasi-wreathed Lord

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்