விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஒரு நாயகமாய்*  ஓட உலகு உடன் ஆண்டவர்,* 
    கரு நாய் கவர்ந்த காலர்*  சிதைகிய பானையர்,*
    பெரு நாடு காண*  இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்,* 
    திருநாரணன் தாள்*  காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கரு நாய் கவர்ந்த காலர் - கரிய நாய்களால் கவ்வப்பட்ட கால்களையுடையவராயும்
சிதைகிய பானையர் - உடைந்த பிச்சைப் பாத்திரத்தையுடைவர்களாயும் ஆகி
பெரு நாடு காண - உலகமெல்லாம் திரண்டுவந்து (பலிபவத்தை) காணும்படியாக
இம்மையிலே - இப்பிறவியிலேயே
தாம் - தாங்களே

விளக்க உரை

உலகங்கட்கெல்லாம் ஓரரசாக வீற்றிருந்து வாழ்ந்தவர்களுங்கூட நாளடைவிலே தரித்ரர்களாய்த் தடுமாறும்படியைக் கட்கூடாகக் காணப்பெறலாயிருக்குமாகையாலே நித்ய ஸ்ரீமானான எம்பெருமானைப் பணிவதே பாங்கு என்கிறார். உலகங்களெல்லாவற்றிற்கும் ஒருவனே அரசனாயிருக்கும்படி ஸார்லபெனால் என்று பெயர் பெறும் மஹாப்ரபு ஒருவன்கூட இருக்கமுடியாது வைராக்ய பஞ்சகத்தில் அருளிச் செய்தபடியே பூமியில் ஒவ்வொரு மூலைக்கு ஒவ்வொருவன் அரசனாக அமையக்கூடும்: ஆனர்லும் “நிகரில் புகழாய் உலகம் மூன்றுமுடையாய்” என்று போற்றப்படுகின்ற எம்பெருமானாகவே தம்மைப் பாவத்திருக்கும் அவர்களுடைய அபிமானத்தையடியொற்றி “ஒரு நாயகமாய் ஓடவுலகுடனாண்டவர்” என்கிறார். ஊண்மையாகவே அப்படிச் சில அரசர்கள் இருந்தார்களென்றுங் கொள்ளலாம். ஓட என்றது -காலம் நெடுகியோட என்றபடியாய் ‘நெடுங்காலம் வரையில்’ என்று பொருள்படும். இப்படி நெடுங்காலம் உலகை ஆண்டவர்களுக்கும் இழவு ஸம்பவிக்கும்படியை மேலிரண்டடிகளால் விசித்திரமாக அருளிச் செய்கிறார் கருநாய் கவர்ந்தகாலர் என்று தொடங்கி.

English Translation

Contemplate, quick, the feet of Tirunarayana and arise! For, monarchs who rule the world as one empire, do one day go begging, leg bitten by a black bitch, bowl broken, shamed and scorned by the world

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்