விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கேடு இல் விழுப் புகழ்க் கேசவனை*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 
    பாடல் ஓர் ஆயிரத்துள்*  இவை ஒரு பத்தும் பயிற்ற வல்லார்கட்கு,*  அவன் 
    நாடும் நகரமும் நன்குடன் காண*  நலனிடை ஊர்தி பண்ணி,* 
    வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும் தரும்*  ஒரு நாயகமே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பாடல் ஓர் ஆயிரத்துள் - ஓராயிரம் பாசுரங்களினுள்ளே
இவையும் ஒரு பத்தும் - இப்பதிகத்தை
பயிற்றவல்லார்கட்கு - ஓதவல்லவர்களுக்கு
அவன் - அந்த எம்பெருமான்
நாடும் நகரமும் - சிறியார் பெரியாரென்கிறவாசியின்றிக்கே அனைவரும்

 

விளக்க உரை

இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். நித்யாஸித்த கல்யாண்குண பூஷிதனான எம்பெருமான் விஷயமாக ஆழ்வாரருளிச்செய்த ஆயிரத்தில் இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கட்கு உபயவிபூதி ஸாம்ராஜ்யமும் குறையற உண்டாம்படி எம்பெருமான் அநுக்ரஹம் செய்தருள்வன் என்றாறாயிற்று. பயிற்றவல்லார்- தாங்கள் ஓதுமவர்கள், பிறரை ஓதுவிக்குமவர்கள் என்ற இருவகைப் பொருளும் கூறுவார்.

English Translation

This decad of the thousand songs by kurugur satakopan on the perfect Kesava, praised by town and country, gives his glory and grants liberation and world-sovereignty forever.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்