விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி*  துழாய் அலங்கல் பெருமான்,* 
    மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து*  வேண்டும் உருவு கொண்டு,* 
    நக்க பிரானோடு அயன் முதலாக*  எல்லாரும் எவையும்,*  தன்னுள் 
    ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று*  ஒன்றும் தளர்வு இலனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துக்கம் இல் ஞானம் - அஜ்ஞானம் கலசாத ஞானத்தை யுடையனாய்
சுடர் ஒளி மூர்த்தி - மிகுந்த தேஜோரூபமான விக்ரஹத்தையுடையனாய்
துழாய் அலங்கல் பெருமான் - திருத்துழாய் மாலையையணிந்த பெருமானாய்,
மிக்க பல்மாயங்களால் - மிகப் பலவகைப்பட்ட ஆச்சரிய சக்திகளாலே
வேண்டும் உருவு கொண்டு - இஷ்டமான உருவங்களைப் பரிக்ரஹித்து

 

விளக்க உரை

எவ்விதமான ஹேயமுமில்லாதவனாய் ஸர்வஜ்ஞனாய் மாசுமறுவற்ற தேஜோமய திவ்யரூபனாய், அதற்குமேலே திருத்துழாய் மாலையுமிணந்து தன் பெருமை யெல்லாம் தோற்ற விளங்குமவனாய், தன்னுடைய விசித்ர சக்திகளாலே தனக்கு விருப்பமான திவ்ய ரூபங்களைப் பரிக்கரஹித்து அற்புதமான திவ்ய சேஷ்டிதங்களைச் சேய்து போருமவனாய்-, “நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்,தளிரொளியிமையவர் தலைவநுமுதலா, யாவகை யுலகமும் யாவருமகப்பட, நிலநீர்த் தீகால் சடரிருமகப்படக் கரந்து, ஓராலிலைச்சேர்ந்த எம்பெருமாமாயன்” (திருவாசரியம்) என்கிறபடியே சிவன் பிரமன் முதலாய எல்லாரையும் மற்று மெல்லாப் பொருள்களையும் பிரளயங் கொள்ளாமே திருவயிற்றிலே வைத்து ரக்ஷிக்குமவனான எம்பெருமானை நான் அடையப் பெற்றதனால் ஒரு தளர்வுமுடையே னல்லேன் என்றாராயிற்று. இரண்டாமடியை “மிக்கபன்மாயங்களால் வேண்டுமுருவு கொண்டு விகிருதுஞ் செய்து” என்று அந்வயிப்பது. விகிருதம் என்றது விலக்ஷண சேஷ்டைகள் என்றபடி. வடசொல். நக்கன் x பிரான். நக்கபிரான். நக்ந : என்ற வடசொல் நக்னெனத்திரிந்தது.

English Translation

The Lord of Tulasi garland, a radiant form of total knowledge, by his wondrous glory appears in many famous spots, and sports on Earth, then swallows Siva, Brahma and all else in a trice. Praising his feet, I have overcome despair.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்