விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும்*  அழகு அமர் சூழ் ஒளியன்,* 
    அல்லி மலர் மகள் போக மயக்குக்கள்*  ஆகியும் நிற்கும் அம்மான்,*
    எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு*  எல்லாக் கருமங்களும் செய்,* 
    எல்லை இல் மாயனை கண்ணனைத் தாள் பற்றி*  யான் ஓர் துக்கம் இலனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அல்லல்  இல் இன்பம் - வருத்தம் சிறிதுங்கலசாத ஆனந்தகுணம்
அளவு இறந்து -
அளவில்லாமல் இருக்கப்பெற்று
எங்கும் அமர் - எங்கும் பரம்பின
அழகு சூழ் ஒளியன் - ஸௌந்தர்யத்தோடு சேர்ந்த லாவண்யமத்தையுடையவனாய்
அல்லி மலர் மகள் - தாமரை மலரில் தோன்றிய பெரிய பிராட்டியோடு

 

விளக்க உரை

முன்னரண்டிகளால்-திருநாட்டில் எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிருப்பையும், பின்னடிகளால்-அவன் இந்நிலத்திற் செய்தருளுஞ் செயல்களையும் பேசி, இப்படிப்பட்ட எம்பெருமானையடையப் பெற்றதனால் தமக்கு யாதொரு துக்கமுமில்லையென்கிறார். ஸ்வர்க்கலோகத்தில் ஸுகமுண்டு என்றாலும் அது துக்கம் கலந்து ஸுகமேயல்லது நிஷ்க்ருஷ்டமான ஸுகமன்று; ஏனெனில்; “ஸ்வர்க்கேபி பாத்பீதஸ்ய க்ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருதி:” என்றகிறபடியே, மற்றொருவன் புண்யபலன்களை யனுபவிக்க முடிந்தவாறே தலைகீழாகக் கீழே தள்ளப்படுவதைக் காணுமளவில் அனுபவிக்கின்ற இன்பமும் துன்பமாகவே தோற்றுமன்றோ; ஆதலால், அல்லலோடு கூடின இன்பமே சுவர்க்கம் முதலிய உலகங்களிலுமள்ளதாம். திருநாட்டிலானந்தம் அப்படியின்றிக்கே நிஷ்க்ருஷ்டமான ஆனந்தமாமயிருக்கும்படியை “இல்லலிலின்பமளவிறந்து’ என்றதனால் கூறினர். எங்குமழகமர் சூழொளியன் =திருநாடடங்கலும் வெள்ளந்கோத்துப் பெருகுகின்ற காந்தியையுடையவன் என்றபடி. அவயவசோபையென்றும் ஸமுதாய சோபையென்றும் அழகு இருவகைப்படும்; அடைவே, ஸௌந்தர்யமென்றும் லாவண்யமென்றும் வழங்கப்பெறும்; இங்க அழகு ஒளி என்றவிவற்றால் அவை விவக்ஷிதம்,“எங்குமழகமர் சூழொளியன்” என்பதற்கு -திருவடி தொடங்கித் திருமுடியீறாக ஒவ்வொரு அவயவத்தையும் தனித்தனி நோக்குமளவில்‘இங்கே இங்கு குடிகொண்டது, இங்கே அழகு குடிகொண்டது’ என்னலாம்படி ஒவ்வோரிடத்திலே பரிஸமாப்தமான அõகுடையவன் என்றும் பொருள் கூறுவர்.

English Translation

Krishna the doer of all, delights in the glances of Lakshmi, Pure delight beyond measure, a spread of beautiful radiance, Lord of boundless knowledge he is self-illumined. Praising his feet, I am freed of despair.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்