விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி*  நின்ற வண்ணம் நிற்கவே,* 
    துயரில் மலியும் மனிசர் பிறவியில்*  தோன்றி கண் காணவந்து,*
    துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில்*  புக உய்க்கும் அம்மான்,* 
    துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ்துற்ற*  யான் ஓர் துன்பம் இலனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சுடர் ஒளி - சிறந்த தேஜோரூபமுமான
தன்னுடைய சோதி - தன்னுடைய விக்ரஹமானது
நின்ற வண்ணமே நிற்க - அங்கு இருக்கும்படியிலொன்றுங் குறையாமே நிற்கும்படியாக
துயரில் மலியும் மனிசப் பிறவியில் தோன்றி - துக்கத்திலே யழுந்தின மனிதருடைய னோனிகளிலே பிறந்து.
கண் காண வந்து- (அனைவரும்) கண்ணாற் காணும்டியாக வந்து

 

விளக்க உரை

தன்னுடைய அப்ராக்ருதமான திவ்யமான விக்ரஹத்தை இதரஸஜாதீயமாக்கி ஸம்ஸாரிகளின் கட்புலனுக்கு இலக்காக்கி வைத்த கண்ணபிரானுடைய திருக்குணங்களை அனுபவிக்கப் பெற்றவெனக்கு ஒரு துன்பமுமில்லை யென்கிறார். எம்பெருமான் மத்ஸ்யகூர்மாகி அவதாரங்களயும் ராமகிருஷ்ணாதி அவதாரங்களையும் செய்தருளின காலத்து ஏற்றுக்கொண்ட திருமேனியானது நம் போன்றவர்களின் உடல்போல மாம்ஸாதிமயம்போல் தோன்றியிருந்தாலும் உண்மையில் அப்படிப்பட்டதன்று; பரமபதத்தில் அப்ராக்ருதமாகவுள்ள திவ்யமங்கள விக்ரஹத்திற்கும் விபவாவதாரங்களில் பரிக்ரஹிக்கப்பட்ட திருமேனிக்கும் சிறிதும் வேற்றுமையில்லை- என்னுமிடம் முன்னடிகளிற் கூறப்பட்டது. கீழும் (3-5-5) “ஆதியஞ்சோதியுருவை அங்குவைத்திங்குப்பிறந்த” என்றருளிச் செய்தது நினைக்க. பகவத் கீதையிலும் நான்காமத்தியாயத்தில் “ப்ரக்ருதிம் 1“வாமதிஷ்டாய ஸம்பவாமி” என்றது காண்க. “மனிசர்பிறவியில்” என்றதை உவலக்ஷணமாகவுங் கொள்ளலாம்; எந்நின்ற யோனியுமாயப் பிறப்பவனாதலால். துயரங்கள் செய்து = துயரங்களைத் தீர்ப்பதற்காக வந்து அவதரித்திருக்கச் செய்தே ‘துயரங்கள் செய்து’ என்னலாமோ வென்னில்! இங்கே நம்பிள்ளை யீடு காண்மின்; “அநுகூலரை அழகாலே நோவுபடுத்தியும், ப்ரதிகூலரை ஆயுதத்தாலே நோவுபடுத்தியும்.”

English Translation

Without the slightest blemish on his natural radiance the Lord appeared in a mortal form on this wretched Earth, performed many a mighty task, and established his divinity. Praising Krishna, the mountain of glory, I am freed of despair.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்