விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ',பரிவு இன்றி வாணனைக் காத்தும்'*  என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த* 
    திரிபுரம் செற்றவனும் மகனும்*  பின்னும் அங்கியும் போர் தொலைய,*
    பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை*  ஆயனை பொன் சக்கரத்து
    அரியினை,*  அச்சுதனைப் பற்றி*  யான் இறையேனும் இடர் இலனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாணனை - பாணாசுரனை
பரிவு இன்றி - வருத்தமின்றியே
காத்தும் என்று -‘காக்கக்கடவோம்’ என்று அபிமானித்து
படையொடுங் - ஆயுதங்களோடு கூட
வந்து எதிர்ந்த - வந்து எதிரிட்ட

 

விளக்க உரை

தேவதாந்தரங்களைப் பற்றினவர்களுக்கு அவர்கள் ரக்ஷகரல்லர் என்பதையும், தன்னைப் பற்றினவர்களைத் தான் கைவிடுவதில்லையென்பதையும் நன்கு காட்டிக்கொடுத்த எம்பெருமானைப் பற்றினவெனக்கு ஒரு குறையுமில்லையென்கிறார். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்:- “கடைகிறபோது எட்டு வடிவு கொண்டுநின்ற கடைந்தாப்போலே த்ரிபுரதஹந மையத்திலே வில்லுக்குமிடுக்காயும் நாணிக்குத் திண்மையாயும் அம்புக்குக் கூர்மையாயும் தனக்கு அந்தராத்மாயும் எதிரிகளைத் தலைசாயும்படி பண்ணி த்ரிபுரத்தையழித்துக் கொடுத்தான். அத்தையறியாதே அஜ்ஞானவர்கள் இத்தை அவன் தலையிலே வைத்துக் கவிபாட இததைச் தானுங்கேட்டு, மெய்யிறேயென்று ‘அது செய்த நமக்கு இவனை வெல்லத்தட்டேன்?’ என்று வந்து எதிரிட்டானாயிற்று. - இத்தால் சொல்லிற்றாயிற்று. ருத்ரன் தன்னை அபாச்ரயமாகப் பற்றினாரை ஆபத்து வந்தவாறே காட்டிக் கொடுத்து ஒடுகமென்னுமிடமும், ஸர்வேச்வரன் தன்னைப் பற்றினால் எல்லாவளவிலும் ரக்ஷிக்குமென்னுமிடமும்.” “பற்றி யான்இறையேனுமிடரிலனே” என்ற விடத்து ஈடு:- பேரன் என்றிருக்கையாலே அநிருத்தாழ்வானுக்கு நாலுநாள் சிறையிலிருக்க வேண்டிற்று; அடியேனென்று பற்றினவெனக்கு அதுவும்வேண்டிற்றில்லை.”

English Translation

The left who rides the Garuda bird wields a golden discus. He fought many wars against the mighty Bana, to protect the good Siva, Kumara and Agni, Praising him, "O Achyuta, Hari, Gopalal", I have no despair.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்