விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உளனாகவே எண்ணி*  தன்னை ஒன்றாக தன் செல்வத்தை* 
    வளனா மதிக்கும்*  இம் மானிடத்தைக் கவி பாடி என்,*
    குளன் ஆர் கழனிசூழ்*  கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,* 
    உளனாய எந்தையை*  எந்தை பெம்மானை ஒழியவே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குளன் ஆர் - குளங்கள் நிறைந்த
கழனி சூழ் - கழனிகளால் சூடுப்பட்ட
கண் - இடமகன்ற
நன் - விலக்ஷணமான
குறுங்குடி - திருக்குறுங்குடியிலே

விளக்க உரை

உண்மையாயும் பர்பூர்ணமாயுமுள்ள கல்யாணகுண சும்பத்துக்களை யுடையனாயிருந்துள்ள எம்பெருமானை விட்டு அஸத்கல்பராய் அற்பு ஸம்பத்துகளையுடையரானவர்களைக் குறித்துக் கவி பாடுவாரை நிந்திக்கிறார். எல்லையில்லாத பெருஞ் செல்வத்தையுடைவனாய் * உயர்வற வுயர்நலமுடையனாயிருந்த எம்பெருமானை யொழிய, தன்னையும் ஒரு வஸ்துவாகப் பார்த்துத் தன் செல்வத்தையும், ஒரு செல்வமாக மத்திருக்கிற இவ்வற்ப மனிதர்களைக் கவிபாடி என்ன பலன் பெறலாகுமென்று கர்ஹிக்கிறார். உளனாகவேயெண்ணி = பிறருடைய கவிக்கு விஷயபூதரான அற்பமசர்களில் எண்ணத்தைக் கூறுவது இது. “அஸந்நேவ ஸ பவதி” என்னுங்கணக்கிலே, இல்லையென்னலாம்படி யிருக்கிற தங்களை உள்ளவர்களாக ப்ரமித்திருக்கின்றார்களாம். ப்ரஹ்மஜ்ஞானமுண்டாகிலன்றோ “ஸந்தமேநம் ததோ விது” என்கிறபடியே உள்ளவர்களாவர். அப்படிப்பட்டவர்கள் பாகவதோத்தமர்களாதலால் அன்னவர்களைத் துதிப்பது ஸ்வரூபாநுரூபமேயாகும்; அது நரஸ்துதிக் குற்றத்தின்பாற் படாதென்றுணர்க. தன் செல்வத்தை வளனாமதிக்கும் = தானே இல்லையாம்போது தன்செல்வமென்று ஒன்றுண்டோ? இல்லாத செல்வத்தை இருப்பதாக நினைத்ததுமல்லாமல் அது தன்னைப்போரப் பொலியவும் நினைப்பதே! என்று கர்ஹிக்கிறபடி வளன்- வளம்; மகரனகரப்போலி.

English Translation

What use singing the praise of these mortals who hold themselves and their wealth in great esteem, when the Lord of celestials, Krishna, my father, resides in Kurungudi surrounded by fertile fields?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்