விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆவியே! ஆர் அமுதே!*  என்னை ஆளுடைத்,* 
    தூவி அம் புள் உடையாய்!*  சுடர் நேமியாய்,* 
    பாவியேன் நெஞ்சம்*  புலம்பப் பலகாலும்,* 
    கூவியும் காணப்பெறேன்*  உன கோலமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆவியே - என் உயிராயிருப்பவனே!
ஆர் அமுதே! - அருமையான அமுதம் போன்றவனே!
என்னை ஆள் உடை - என்னை அடிமை கொண்ட
அம் தூவி புள உடையாய் - அழகிய சிறகுள்ள கருத்மானை வாகனமாக வுடையவனே!
சுடர் நேமியாய் - ஒளிமிக்க திருவாழியையுடையவனே!

விளக்க உரை

மஹாபாபியாகையாலே நெஞ்சின் விடாய் தீர்க்கவும் பெற்றிலேனான நான் நெடுநாள் கூப்பிட்டவிடத்திலும் உன்னுடையவழகு காணவும் பெற்றிலேன் என்கிறார். அதாவது- கரணங்களையொழியத் தம்முடைய இழவு சொல்லுகிறபடி- “ப்ரஜைகளின் இழவும் பசியும் சொன்னார் கீழ்; தமிமிழவும் பசியும் சொல்லுகிறார் மேல்” என்பது ஈடு. உயிரைவிட்டுப் பிரிந்து தரித்திருக்கவொண்ணுமோ? உயிர்க்கும் உயிரான உன்னைவிட்டு எங்ஙனே தரித்திருக்க வல்லேன் என்கிறார் ஆவியே! என்றதனால், உயிராயிருப்பதோடு கூடபோக்யதையும் அளவற்றிருப்பதனால் தரிக்கமுடியாமையை ஆரமுதே! என்பதனால் தெரிவிக்கிறார். என்னையாளுடை என்பதைப் புள்ளுடையானுக்கும், அடைமொழியாக்கலாம், புள்ளுக்கும் அடைமொழியாக்கலாம். பகவத் விஷயத்தில் அடிமையிற்காட்டிலும் பாகவத விஷயத்தில் அடிமையே சிறக்குமாதலால் புள்ளுக்கு அடைமொழியாக்குதல் சிறக்குமென்க. சுடர் நேமியாய்!- போக்யதைக்கும் விரோதி நிரஸநத்திற்கும் அமைந்த திருவாழியை யுடையவனே! என்றபடி

English Translation

O My Master, Ambrosia for my soul! I call you forever with grief in my heart. O Lord of radiant discus, come riding to me on your Garuda bird. Alas, wicked me! You do not show your beautiful.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்