விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்களால் காண*  வருங்கொல்?  என்று ஆசையால்,* 
    மண் கொண்ட வாமனன்*  ஏற மகிழ்ந்து செல்,* 
    பண் கொண்ட புள்ளின்*   சிறகு ஒலி பாவித்து,* 
    திண் கொள்ள ஓர்க்கும்*  கிடந்து என் செவிகளே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் செவிகள் - எனது காதுகளானவை
கண்களால் காண வரும் கொல் என்று ஆசையால் - கண்களால் காணும்படி வருவனோ வென்று ஆசையினால்
மண் கொண்ட வாமனன் ஏற - (மாவலியிடம்) பூமியைக் கவர்ந்த வாமனன் (தன் மீது) ஏறுதலால்.
மகிழ்ந்து செல் - மகிழ்ச்சியோடு செல்கின்ற
புள்ளின் - க்ருத்மானுடைய

விளக்க உரை

காணவும் வேணும், கேட்கவும் வேணுமென்று செவிகள் ஆசைப்படுகின்றன வென்கிறார். இப்பாசுரத்தில் செவிகள் எழுவாயாதலால் முதலடியில் கூறுப்பட்டுள்ள ஆசை செவிகளுக்குண்õடன ஆசையாகவே கொள்ளத்தக்கது. செவிகளானவை தமக்குக் கண்கள் முளைக்கவேணுமென்றும் அவற்றாலே காணவேணுமென்றும் ஆசைப்படுகிறபடி அன்றியே, தாமே கண்களாக மாறிக் காண ஆசைப்படுகிறபடியுமாம். கண்ணாரக் கண்டுகளிக்க எழுந்தருள்வனோ வென்கிற நசையாலே செவிகளானவை, எம்பெருமான் பெரிய திருவடியின் மீது ஏறிக்கொண்டு எழுந்தருள்வதாகவும், எம்பெருமானைச் சுமந்துகொண்டு பெரிய திருவடி மகிழ்ச்சியாலே சிறகுகளையடித்துக்கொண்டு விரைந்து ஓடிவருவதாகவும் பாவனை கொண்டு அந்தச் சிறகொலியைக் கேட்க அதிலேயே ஊற்றமுற்றிருக்கின்றன வென்கிறார். மண் கொண்ட வாமனன் ஏற = வாமநமூர்த்தியாவது த்ரிவிக்ரமமூர்த்தியாவது பெரிய திருவடியின் மீது ஏறி யெழுந்தருளினதாக எங்கும் ப்ரஸிக்தியில்லை; அப்படியிருக்க “வாமனன் ஏற” என்று இங்கு அருளிச் செய்தது ஏன்? என்னில், வாமனன் என்கிற வ்யாக்தியில் நோக்காக அருளிச்செய்வதன்று; அவனுடைய செயலில் மாத்திரமே இங்கு நோக்கு; தன்னுடைமையைப் பெறுவதற்குத்தான் இரப்பாளனாய்ச் செல்லுதல் என்னும் குணவிசேஷத்தையுடையனான எம்பெருமான் என்றபடி ‘பெரியதிருவடியின் மீது ஏறிக்கொண்டு எம்பெருமான் ஆங்காங்கு யாத்திரை செய்வதானது தன்னுடைமையைத்தான் இரந்து பெறுதற்கு’ என்று ஆழ்வாருடைய நினைவு போலும்.

English Translation

Vying with my craving eyes, my ears perk up in attention, yearning to hear the sweet rustle of the wings of Garuda, would that the brings the Earth-Master Vamana here.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்