விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உருப்பிணி நங்கையைத்*  தேர் ஏற்றிக் கொண்டு* 
    விருப்புற்று அங்கு ஏக*  விரைந்து எதிர் வந்து* 
    செருக்கு உற்றான்*  வீரம் சிதையத்*  தலையைச்- 
    சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற* 
    தேவகி சிங்கத்தைப் பாடிப் பற.*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உருப்பிணி நங்கையை - ருக்மிணிப்பிராட்டியை
தேரின் - (தனது) தேரின்மேல்
ஏற்றிக்கொண்டு - ஏற்றிக்கொண்டு
விருப்புற்று - ஆசையுடனே
ஏ - (கண்ணன்) எழுந்தருளப்புக,

விளக்க உரை

விதர்ப்பதேகத்தில் குண்டினிமென்கிற பட்டணத்தில் பீஷ்மகனென்கிற அரசனுக்கு ருக்மன் முதலிய ஐந்துபிள்ளைகளும் ருக்மிணி என்கிற ஒருபெண்ணுமிருந்தனர். அந்த ருக்மிணியினாவள் ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அவதாரம்; அவளுக்கு புக்தவஸ்ஸுவந்தவுடனே கண்ணபிரான் அங்கு சென்று இப்பெண்ணை எனக்குத் தாரைவார்த்துக் கொடுங்கள் என்று கேட்க, ருக்மன் என்பவன் அவளைச் சிசுபாலனுக்குக் கொடுக்க நினைத்துக் கண்ணனுக்குக் கொடுக்கலாகாதென்று தகைந்துவிட்டு, சிலநாள் கழிந்தபின் அந்த ருக்மிணியின் கல்யாணத்துக்காக ஸ்வயம்வரம் கோடித்து ஸகலதேசத்தரசர்களையும் வரவழைத்திட்டனன்; இதனிடையில் ருக்மிணி “அன்றிப்பின் மற்றொருவற்கென்னைப் பேசலொட்டேன் மாலிருஞ்சோலையெம்மாயற்கல்லால்’ என்ற துணிவையுடையவளாகையால் தன்னை எவ்வகையினாலாகிலும் மணந்து செல்லும்படி கண்ணபிரானிடத்துக்கு ஒரந்தணனைத் தூதுவிட்டிருந்தாள். கண்ணபிரானும் அங்ஙனமே பலராமன் முதலியோரைக் கூட்டிக்கொண்டு அப்பட்டணத்திற்கு எழுந்தருளி, கல்யாண முஹுர்த்த தினத்துக்கு முதனாள் அந்த ருக்மிணியைத் தான் ப்ரகாசமாக எடுத்துத் தேரிலேற்றிக் கொண்டு ஊர்நோக்கிப் புறப்படப் புக, சிசுபாலன் முதலிய சில அரசர்கள் கண்ணனை எதிர்த்துப் போர்செய்ய முயல பலராமனுந் தானுமாக அவர்களை வலியடக்கி வென்று ஓட்டிவிட, பின்பு (ருக்மிணியின் தமையனான) ருக்மன் மிகவும் வெகுண்டு ஆக்ரஹப்பட்டுக் கண்ணனை முடிப்பதாக ஓங்கிவர, அவனைக் கண்ணபிரான் ருக்மினியின் பிரார்த்தனையின்படி உயிர்க்கொலை செய்யாமல் அவனது மீசையையும், குடுமியையும் சிரைத்துப் பங்கப்படுத்தினனென்று வரலாறு அறியத்தக்கது.

English Translation

When the Lord seated Rukmini on the chariot and was about to make off with her, the haughty brother Rukma came rushing against him. Wiping out his vanity the Lord cut his head. Sing his valour and swing, sing of devaki’s lion-cub and swing.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்